விளையாட்டு

"இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை"- உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா உருக்கம் !

உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

"இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை"- உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஞ்சி தொடரில் பரோடா அணிக்காக ஆடிய ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணியில் நீண்ட நாள் வேகப்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டர் இல்லாத நிலையில், அந்த குறையை ஹர்திக் பாண்டியா நிறைவு செய்தார்.

இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா முதல் முறையிலேயே அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார். இதன் காரணமாக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக ஹர்திக் பாண்டியா மாறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை அணியிலும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில், வங்கதேச அணியுடனாக போட்டியின் போது, பந்தை காலால் தடுக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, கால் தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

"இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை"- உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா உருக்கம் !

அதன் பின்னர் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் இடம்பெறவில்லை. எனினும் இறுதி லீக் போட்டிகளில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் காயம் குணமடையாத காரணத்தால் உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, "உலகக் கோப்பையின் மீதமுள்ள போட்டிகளை நான் மிஸ் செய்வேன் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒவ்வோர் ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் அவர்களை உற்சாகப்படுத்தி, உற்சாகத்துடன், அணியுடன் இருப்பேன். அனைவரின் வாழ்த்துகளுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி. எனக்கு இந்த அணி மிகவும் ஸ்பெஷல். நிச்சயமாக அனைவரையும் பெருமைப்படுத்துவோம் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories