விளையாட்டு

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் : ஒப்புதல் அளித்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் : ஒப்புதல் அளித்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நடந்து முடிந்தது. பொதுவாக ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இடம்பெறாத நிலையில், இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்ட நிலையில், அதில் இந்திய அணி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தங்கம் வென்று அசத்தியது.

அதனைத் தொடர்ந்து தற்போது 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் தொடர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. ஆனால், அப்போது டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இருந்ததால் நாட்கள் பற்றாக்குறை காரணமாக பின்னர் வந்த ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை.

ஆனால், தற்போது டி20 போட்டிகள் வந்ததால் சில மணி நேரத்துக்குள் கிரிக்கெட் போட்டிகள் நிறைவடையும் நிலை ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த1998 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் தொடர் சேர்க்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் : ஒப்புதல் அளித்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதே நேரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க ஐசிசி அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வந்தது. வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் தொடர் மீண்டும் அறிமுகம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன.

இதனிடையே 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட், பேஸ்பால், ஃபிளாக் ஃபுட்பால், லுக்ராஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளைச் சேர்க்கப் பரிந்துரைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இன்று மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பேஸ்பால், ஸ்குவாஷ், ஃபிளாக் ஃபுட்பால் ஆகிய போட்டிகளை சேர்க்கவும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories