விளையாட்டு

கோலி, கோலி என அதிர்ந்த அரங்கம்: ஆப்கான் வீரரை கிண்டல் செய்த ரசிகர்கள்: கோலி செய்த செயலால் நெகிழ்ச்சி !

நவீன் உல்-ஹக், கோலி ஆகிய இருவரும் கை குலுக்கியதுடன் ஆரத்தழுவி தங்கள் மோதலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

கோலி, கோலி என அதிர்ந்த அரங்கம்: ஆப்கான் வீரரை கிண்டல் செய்த ரசிகர்கள்: கோலி செய்த செயலால் நெகிழ்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ஆப்கான் வீரர் நவீன் உல் காஃக் இடையேயான முதல் முக்கிய கவனம் பெற்றது லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹாக் மற்றும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் ஹாக்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் நவீன் மற்றும் கோலி இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முயற்சி செய்தார். நவீனிடம் சென்று கோலியுடன் சமாதானமாக செல்ல அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு நவீன் உல் ஹாக் மறுத்து அங்கிருந்து நகர்ந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த மோதல் அதன்பின்னர் ஐபிஎல் தொடரின் இறுதிவரை பல்வேறு விதங்களில் வெளிப்பட்டது.

கோலி, கோலி என அதிர்ந்த அரங்கம்: ஆப்கான் வீரரை கிண்டல் செய்த ரசிகர்கள்: கோலி செய்த செயலால் நெகிழ்ச்சி !

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியில் நவீன் உல் ஹாக் மற்றும் இந்திய அணி வீரர் விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதனால் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

களத்தில் நவீன் உல் ஹாக் பேட்டிங் செய்யவந்த போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கோலி, கோலி என கோஷமிட்டனர். அதன் பின்னர் நவீன் உல் ஹக் பந்துவீச வந்தபோதும், ரசிகர்கள் அவரை கேலி செய்யும் நோக்கில கோலி, கோலி என கோஷமிட்டனர். அப்போது நவீனை பார்த்து முழக்கமிடுவதை நிறுத்துமாறு ரசிகர்களுக்கு கோலி சைகை காட்டினார். அதன் பின்னரே ரசிகர்கள் நவீனை கிண்டல் செய்வது குறைந்தது.

கோலி, கோலி என அதிர்ந்த அரங்கம்: ஆப்கான் வீரரை கிண்டல் செய்த ரசிகர்கள்: கோலி செய்த செயலால் நெகிழ்ச்சி !

அதனைத் தொடர்ந்து போட்டி முடிந்தபின்னர் நவீன் உல்-ஹக், நேராக கோலியிடம் சென்று கை குலுக்கியதுடன் இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர். போட்டி முடிந்த பின்னர் இது குறித்து பேசிய நவீன்,"நான் கோலியிடம் நேராக கைக்குலுக்க சென்றேன். விராட் கோலி என் கையை குலுக்கி விட்டு நமக்குள் இருக்கும் மோதலை இப்போதே முடித்துக் கொள்வோம் என்று கூறினார். அதற்கு நானும் சிரித்துக் கொண்டு நாம் இருவரும் சேர்ந்து முடித்துக் கொள்வோம் என்று கூறி கையை குலுக்கினேன். அதன்பிறகு இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு எங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories