விளையாட்டு

"இதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" - இங்கிலாந்து மீதான வன்மத்தை கொட்டிய ஆஸ். முன்னாள் கேப்டன் !

"இதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" - இங்கிலாந்து மீதான வன்மத்தை கொட்டிய ஆஸ். முன்னாள் கேப்டன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதினஇதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் கேப்டன் ஜோஸ் பட்லர் ( 43 ரன்கள் ) மற்றும் ஜோ ரூட் (77 ரன்கள் ) குவித்தனர். இறுதிக்கட்ட வீரர்களும் சிறிய பங்களிப்பு கொடுக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா , கான்வே ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி சதம் விளாசினர். இந்த ஜோடியை இறுதிவரை இங்கிலாந்து வீரர்களால் வீழ்த்த முடியவில்லை. இறுதியில் நியூஸிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. நியூஸிலாந்து தொடக்க வீரர் கான்வே 152 ரன்கள் குவித்தும்,ரச்சின் ரவீந்திரா 123 ரன்கள் குவித்தும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

"இதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" - இங்கிலாந்து மீதான வன்மத்தை கொட்டிய ஆஸ். முன்னாள் கேப்டன் !

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் இந்த தோல்வியை குறிப்பிட்டு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், " போட்டியை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. நியூஸிலாந்து அணி இங்கிலாந்தை அடித்து நொறுக்கினார்கள்

அவர்கள் இங்கிலாந்தை அடித்து நொறுக்கினார்கள். நாங்கள் நேற்று இரவு 10 மணி அளவில்தான் ஆலன் பார்டர் மைதானத்தில் இருந்து வந்தோம். இதனால் நான் தூங்கி விடுவேன் என்று நினைத்தேன்.பெரும்பாலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியாக இதை பார்த்திருப்பார்களோ அப்படியே நானும் பார்த்தேன். இது தொடரும் என்று நம்புகிறேன்.

மார்க் வுட் 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசிக்கொண்டு இருந்தார். ஆனால் பந்து பேட்டில் பட்டு ல்டர்களை எல்லாம் தாண்டிக் கொண்டு பறந்தது. இந்தியினாவில் வேகமாக பந்து வீசினால் தற்காப்பது கடினம். ஏனெனில் இந்திய மைதானங்கள் மிகவும் சிறியவை மற்றும் அங்குள்ள ஆடுகளங்கள் தட்டையானவை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories