விளையாட்டு

"என் கால்கள் சொல்லும் வரை I'm not finished" -வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரொனால்டோ !

விரைவில் ஓய்வை அறிவிக்கப்போவதாக வதந்திகள் வெளியான நிலையில், அதற்கு ரொனால்டோ முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

"என் கால்கள் சொல்லும் வரை I'm not finished" -வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரொனால்டோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025- ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல் நாசர் அணியில் இணையும் முன்னர் ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார். அப்போது அவருக்கும் அணியின் பயிற்சியாளரருக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. முக்கிய போட்டிகளில் ரொனால்டோ வெளியே அமரவைக்கப்பட்டார்.

"என் கால்கள் சொல்லும் வரை I'm not finished" -வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரொனால்டோ !

அதனைத் தொடர்ந்து அவருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரம் பெரிதான நிலையில், ரொனால்டோவை அவரின் சம்மதத்தோடு வெளியேற்றுவதாகவும், அவரோடு செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாகவும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்தது. அதன் பின்னரே அவர் அல் நாசர் கிளப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது சவூதி அரேபியாவில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், அவர் விரைவில் ஓய்வை அறிவிக்கப்போவதாக சில வதந்திகள் வெளியான நிலையில், அதற்கு ரொனால்டோ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நான் ஓய்வு பெறப்போவதாக சில செய்திகள் வெளியாகின. ஆனால், அவை உண்மையல்ல. என் கால்கள் சொல்லும் வரை நான் கால்பந்து விளையாடுவேன். இன்னும் அதிக கோல்கள் அடிக்க நான் விரும்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை விரும்புகிறேன். நான் விளையாடி முடித்துவிட்டேன் என்று கூறுகிறார்கள். அது உண்மையல்ல என்பதை போட்டிகளின் மூலம் நிருபித்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories