விளையாட்டு

3 விதமான கிரிக்கெட் வடிவிலும் முதலிடம்.. 11 ஆண்டுகள் உடைக்கப்படாமல் இருந்த சாதனை.. சமன் செய்த இந்தியா !

தரவரிசையில் 3 விதமான கிரிக்கெட் வடிவிலும் முதலிடம் பிடித்து இந்திய அணி தென்னாபிரிக்காவின் சாதனையை சமன் செய்துள்ளது.

 3 விதமான கிரிக்கெட் வடிவிலும் முதலிடம்.. 11 ஆண்டுகள் உடைக்கப்படாமல் இருந்த சாதனை.. சமன் செய்த இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2012-ம் ஆண்டு கிரேம் ஸ்மித் தலைமையில் டெஸ்ட் தொடரில் தென்னாப்ரிக்கா அணி முதல் இடம் பிடித்தது. அதே போல அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் தலைமையில், ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி முதலிடம் பிடித்தது.

அந்த காலகட்டத்தில் தென்னாபிரிக்க அணியில், காலிஸ், ஆம்லா, டு பிளஸிஸ், டுமினி, பௌச்சர், இம்ரான் தாஹிர், மார்கல் சகோதரர்கள், ஸ்டெயின், பிளாண்டர் போன்ற தலைசிறந்த வீரர்கள் இடம்பெற்று உலகத்தின் அத்தனை நாடுகளுக்கும் சென்று வெடிகொடியேற்றினர்.

அந்த ஆண்டு தென்னாபிரிக்கா பிடித்த 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் முதலிடம் என்ற சாதனையை அதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி எந்த அணியும் எட்டிப்பிடிக்கவில்லை. இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் கூட பல்வேறு சந்தர்ப்பத்தில் எதாவது 2 விதமான கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்தாலும், 3 விதமான கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கவில்லை.

 3 விதமான கிரிக்கெட் வடிவிலும் முதலிடம்.. 11 ஆண்டுகள் உடைக்கப்படாமல் இருந்த சாதனை.. சமன் செய்த இந்தியா !

ஆனால், தென்னாபிரிக்கா இந்த சாதனையை படைத்து சுமார் 11 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் அதே சாதனையைப் படைத்துள்ளது. டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் இந்திய அணி அந்த தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தது. அதே போல டி20-யிலும் முதலிடத்தை பிடித்திருந்தது.

ஆனால், ஒருநாள் போட்டிகளில் மட்டும் 2-ம் இடத்தில் நீடித்து வந்தது. ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக வெற்றிபெற்றால் ஒருநாள் தொடரிலும் முதலிடம் பிடிக்கலாம் என இருந்த நிலையில், அந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது. ஆனால், தற்போது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டி தரவரிசையிலும் முதலிடம் பிடித்து இந்திய அணி தென்னாபிரிக்காவின் சாதனையை சமன் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories