விளையாட்டு

உலகக்கோப்பை அணியில் தமிழக வீரர் ? - ரோஹித் சர்மாவின் கருத்தால் மகிழ்ச்சியில் தமிழ்நாடு ரசிகர்கள் !

உலகக்கோப்பை அணியில் இணைவது குறித்து அஸ்வினிடம் தொலைபேசியில் நேரடியாக பேசியுள்ளேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

உலகக்கோப்பை அணியில் தமிழக வீரர் ? - ரோஹித் சர்மாவின் கருத்தால் மகிழ்ச்சியில் தமிழ்நாடு ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் முக்கிய சுழற்பந்து வீச்சளர்களான அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோர் இடம்பெறவில்லை.

உலகக்கோப்பை அணியில் தமிழக வீரர் ? - ரோஹித் சர்மாவின் கருத்தால் மகிழ்ச்சியில் தமிழ்நாடு ரசிகர்கள் !

இந்த நிலையில், ஆசியக்கோப்பை போட்டியின்போது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இதனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு அழைக்கப்பட்ட ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

அதன் பின்னர் இறுதிப்போட்டி முடிந்ததும் இந்திய அணி தலைவர் ரோஹித்சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சுழல் பந்துவீச்சில் பேட்டிங் செய்யகூடிய வீர்ர்களை விரும்புகிறோம். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இதைப் பற்றி அஸ்வினிடம் தொலைபேசியில் நேரடியாக பேசியுள்ளேன். எனவே அவரும் அக்சர் படேலுக்கு பதில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான வரிசையில் இருக்கிறார். அதே போலவே வாஷிங்டன் சுந்தரும் இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories