விளையாட்டு

தோல்வியால் விரக்தி.. மைதானத்துக்கு வெளியே மோதிக்கொண்ட பாபர் அசாம் - அப்ரிடி.. வெளியான அதிர்ச்சி பின்னணி !

ஆசிய கோப்பை தொடரில் வெளியேறியதும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தோல்வியால் விரக்தி.. மைதானத்துக்கு வெளியே மோதிக்கொண்ட பாபர் அசாம் - அப்ரிடி.. வெளியான அதிர்ச்சி பின்னணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆசிய கோப்பை போட்டி சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாள அணியை சந்தித்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாள அணியை நொறுக்கி அபாரவெற்றிபெற்றது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது.

அந்த போட்டியில் மழை மட்டும் பெய்யாமல் இருந்தால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டி முடிவு கிடைக்கவில்லை என்றாலும் குரூப் பிரிவில் முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில், வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது. ஆனால், அடுத்து நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி 228 வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பின்னர் நடைபெற்ற முக்கியமான போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் வெற்றியை இழந்தது. இதன் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்த அணியை அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.

தோல்வியால் விரக்தி.. மைதானத்துக்கு வெளியே மோதிக்கொண்ட பாபர் அசாம் - அப்ரிடி.. வெளியான அதிர்ச்சி பின்னணி !

இந்த நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட செய்தியில், இலங்கைக்கு எதிரான போட்டிக்கு பின்னர் வீரர்களின் ஓய்வறையில் வீரர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அப்போது, கேப்டன் அசாம் பாகிஸ்தான் அணி வீரர்கள் முக்கியமான தருணங்களில் பொறுப்புடன் செயல்படவில்லை என்று விமர்சித்துள்ளார். அப்போது இடையே குறுக்கிட்ட ஷாஹீன் அப்ரிடி, குறைந்த பட்சம் அந்த போட்டியில் சிறப்பாக ஆடிய வீரர்களையாவது பாராட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாபர் அசாம், கேப்டன் பேசும்போது பேசும்போது யாரும் குறிக்கிடவேண்டும். போட்டியில் யார் என்னென்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக பாபர் அசாமுக்கும், ஷாஹீன் அப்ரிடிக்கும் வாக்குவாதம் ஏற்பதாகவும், அப்போது விக்கெட் கீப்பர் ரிஸ்வான் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories