விளையாட்டு

”இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் எப்படி நட்பை வெளிப்படுத்தலாம் ?” - கவுதம் கம்பீர் காட்டம் !

மைதானத்தில் இந்தியா -பாகிஸ்தான் வீரர்கள் வெளிப்படையாக நட்பு பாராட்டிக்கொண்டதை கம்பிர் விமர்சித்துள்ளார்.

”இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் எப்படி நட்பை வெளிப்படுத்தலாம் ?” - கவுதம் கம்பீர் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கிரிக்கெட் அரங்கில் பல தசாப்தங்களாக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகவும் அதிக எதிர்பார்ப்புமிக்க போட்டியாகவும் இந்தியா -பாகிஸ்தான் மோதல் நிலவி வருகிறது. இரு அணிகளும் மோதும் போட்டியில் வீரர்களைத் தாண்டி ரசிகர்கள் மத்தியிலும் அனல்பறக்கும் நிலை இருக்கும்.

கபில்தேவ் -மஜித்கான், கிரண் மோர்-மியன்தட், வெங்கடேஷ் பிரசாத்- அமீர் சொஹைல், கம்பீர் -அப்ரிடி, கம்பீர் - கம்ரான் அக்மல், ஹர்பஜன் சிங் - சோயப் அக்தர், அக்மல் - இஷாந்த் சர்மா என தலைமுறைதோறும் களத்தில் இந்தியா பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையேயான மோதல் நடந்துவந்துள்ளது.

மேலும், இரு நாடுகளும் இந்த போட்டியை அரசியல் ரீதியாக கொண்டுசென்றதால் விளையாட்டை தாண்டியும் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த சூழலில், கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

”இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் எப்படி நட்பை வெளிப்படுத்தலாம் ?” - கவுதம் கம்பீர் காட்டம் !

அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

கடந்த கால வரலாறு இப்படி இருக்கும் நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே வெளிப்படையான நட்பு நிலவுகிறது. முன்னர் இரு வீரர்களுக்கு இடையே நட்பு நிலவினாலும், அதை பொதுவெளியில் வீரர்கள் காட்டியது இல்லை. ஆனால், தற்போது பொதுவெளியில் தங்கள் நட்பை வெளியிடுவதில் இரு நாட்டு வீரர்களும் தயங்குவதில்லை.

தற்போது நடந்துமுடிந்த இந்தியா பாகிஸ்தான் மோதலில்போதும் இந்தியா -பாகிஸ்தான் வீரர்கள் வெளிப்படையாக நட்பு பாராட்டிக்கொண்டனர். இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. ஆனால், இந்த புகைப்படத்தை பாஜகவினர் பலர் விமர்சித்திருந்தனர்.

”இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் எப்படி நட்பை வெளிப்படுத்தலாம் ?” - கவுதம் கம்பீர் காட்டம் !

அந்த வகையில் இந்த செயலை முன்னாள் இந்திய வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பிர் விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "தேசிய அணிக்காக களமிறங்கும் போது வீரர்களுக்கு இடையிலான நட்பை பவுண்டரி லைனுக்கு வெளியில் தான் வைக்க வேண்டும். மைதானத்தில் ஆக்ரோஷம் கொப்பளிக்க வேண்டும். போட்டி முடிந்து சில மணி நேரத்துக்கு பின்னர் வீரர்கள் நட்பை வெளிப்படுத்தலாம், ஆனால், மைதானத்தில் அப்படி இருக்கக்கூடாது.

வீரர்கள் கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக விளையாடுகிறார்கள். அதனை புரிந்து அவர்கள் செயல்படவேண்டும். தற்போது களத்திலேயே இரு அணி வீரர்களும் நட்பு பாராட்டிக் கொள்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அதனை பார்க்கவே முடியாது" என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories