விளையாட்டு

“நான் அணியில் இல்லாவிட்டாலும் இதுதான் என் ஆசை” : இந்திய அணி குறித்து அஸ்வின் கூறியது என்ன ?

நான் அணியில் இல்லாவிட்டாலும், இந்தியா மீண்டும் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளேன் என இந்திய அணி வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

“நான் அணியில் இல்லாவிட்டாலும் இதுதான் என் ஆசை” : இந்திய அணி குறித்து அஸ்வின் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தார். அதன்பின்னர் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்த அஸ்வின் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக திகழ்ந்தார்.

அதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். எனினும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் தனது சிறப்பான செயல்பாடு காரணமாக அணியில் இடம்பிடித்தார்.

ஆனால், அதன் பின்னர் மீண்டும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் பெயர் இடம்பெற வாய்ப்பில்லை என்ற நிலையே தற்போது இருக்கின்றது.

“நான் அணியில் இல்லாவிட்டாலும் இதுதான் என் ஆசை” : இந்திய அணி குறித்து அஸ்வின் கூறியது என்ன ?

இந்த நிலையில், நான் அணியில் இல்லாவிட்டாலும், இந்தியா மீண்டும் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளேன் என அஸ்வின் கூறியுள்ளார். உலகக்கோப்பையில் தனக்கான இடம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், "இதுபோன்ற எண்ணங்களுக்கு மனதளவில் இடம்கொடுக்க வேண்டாம் என்று நீண்டகாலத்திற்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். மேலும், அணியைத் தேர்ந்தெடுப்பது எனது வேலை அல்ல என்பதால் அதில் கவனம் செலுத்துவதில்லை. நான் அணியில் இல்லாவிட்டாலும், இந்தியா மீண்டும் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இப்போது, நான் நன்றாக பந்து வீசுவதாகவும், பேட்டிங் செய்வதாகவும் உணர்கிறேன். இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அடுத்து தென்னாப்பிரிக்க தொடரில் எனது கவனம் உள்ளது. காயம் காரணமாக நான் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories