விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : புள்ளிப்பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம்.. முழு விவரம் என்ன ?

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் மலேசியா முதல் இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : புள்ளிப்பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம்.. முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விளையாட்டுக்கு புகழ் பெற்ற சென்னையில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் தவிர பிற முக்கிய சர்வதேச போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முயற்சியால் 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக பல்வேறு நாடுகளின் வீரர்கள் சென்னை வந்த நிலையில், முதல் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். நேற்று வரை இரண்டு நாட்கள் இந்த போட்டி நடந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் மலேசியா முதல் இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : புள்ளிப்பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம்.. முழு விவரம் என்ன ?

நேற்றைய தினம் இரண்டாவது நாளில் முதல் போட்டியில் கொரியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மலேசியா, சீனா அணிகள் மோதின. இதில் மலேசியா சீனாவை 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா, ஜப்பானை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

எனவே லீக் சுற்றுகளில் 6 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று மலேசியா முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில், ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் பெற்று 4 புள்ளிகளுடன் இந்திய அணியும், மூன்றாவது இடத்தில் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்து கொரியாவும் உள்ளனர். நான்காவது இடத்தில் ஜப்பான், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு புள்ளியுடன் உள்ளனர். ஆறாவது இடத்தில் விளையாடிய 2 போட்டிகளிலுமே தோல்வியை தழுவிய சீனா 0 புள்ளிகளுடன் உள்ளது.

banner

Related Stories

Related Stories