விளையாட்டு

ஒட்டுமொத்தமாக சொதப்பிய இந்திய பேட்டிங்.. இளம் இந்திய அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி !

முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஒட்டுமொத்தமாக சொதப்பிய இந்திய பேட்டிங்.. இளம் இந்திய அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இதன் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.

அதனை தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கக்கூடிய கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைபற்றியது.

ஒட்டுமொத்தமாக சொதப்பிய இந்திய பேட்டிங்.. இளம் இந்திய அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி !

அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் பவெல் (48 ரன்கள் ) பூரான் (41 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 150 ரன்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் கடைசி 30 பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஹர்திக பாண்டியா, சாம்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக இறுதியில் இந்திய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய வீரர்களால் அந்த ஓவரில் 5 ரன் மட்டுமே குவிக்கமுடிந்தது . இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

banner

Related Stories

Related Stories