விளையாட்டு

பாகிஸ்தானுக்கு நாமம் அடித்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.. மீண்டும் கெத்து காட்டிய BCCI.. ஆசிய கோப்பை Update

ஆசிய கோப்பைக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு நாமம் அடித்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.. மீண்டும் கெத்து காட்டிய BCCI.. ஆசிய கோப்பை Update
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.இதனிடையே 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டு இது தொடர்பான அறிக்கையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது.

பாகிஸ்தானுக்கு நாமம் அடித்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.. மீண்டும் கெத்து காட்டிய BCCI.. ஆசிய கோப்பை Update

ஆனால், இதனையும் பிசிசிஐ ஒப்புக்கொள்ளாமல் ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் அல்லாது பொதுவான இடத்தில் நடத்த கோரிக்கை விடுத்தது. இதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள வாரியங்கள் ஒப்புக்கொண்ட நிலையில், இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தானில் சில போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒப்புக்கொள்ள வேறு வழியின்றி அதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது.

இதன் காரணமாக விரைவில் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது அது வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 17 வரை நடத்தப்படவுள்ளது. இதில் ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 3 அணிகள் ஒரு குழுவிலும், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மற்றொரு குழுவிலும் இடம் பெற்றுள்ளது. இதில் இந்திய அணி செப்டம்பர் 2-ம் தேதி இலங்கை கண்டி மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி இலங்கை கொழும்புவில் நடைபெறுகிறது.

banner

Related Stories

Related Stories