விளையாட்டு

"உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள் இதுதான்" - கங்குலி கூறிய அணிகள் என்னென்ன ?

இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்த தனது கணிப்பை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வெளிப்படுத்தியுள்ளார்.

 "உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள் இதுதான்" - கங்குலி கூறிய அணிகள் என்னென்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கடைசியாக ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அதோடு உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பையை இந்தியா வென்ற நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறவுள்ளதால் இந்த முறை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 "உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள் இதுதான்" - கங்குலி கூறிய அணிகள் என்னென்ன ?

இந்த நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்த தனது கணிப்பை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வெளிப்படுத்தியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கங்குலி, "உலகக் கோப்பையில் எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பதை சரியாகக் கூறுவது கடினம். ஆனால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் நிச்சயம் அரையிறுதிக்கு செல்லும் என நினைக்கிறேன்.

அதே நேரம் பெரிய தொடர்களில் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இதனை பல முறை அந்த அணி நிர்ணயித்துள்ளது. அதனால் நான்காவது அணியாக அதனை குறிப்பிடுவேன். இதனை தவிர ஐந்தவராது விருப்பமாக பாகிஸ்தானையும் இந்த பட்டியலில் சேர்க்கிறேன். பாகிஸ்தான் அரையிறுதிக்கு சென்றால், ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெற வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories