விளையாட்டு

உள்நாட்டிலே கிழிக்காதவர்கள், சர்வதேச அளவில் என்ன செய்வார்கள் -தேர்வு குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்கள்!

உள்ளூர் அளவிலேயே தரமான வீரர்களை தேர்ந்தெடுக்காதவர்கள், எப்படி சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தரமான வீரர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்று வெங்கடேஷ் பிரசாத் தேர்வுக்குழுவினரை விமர்சித்துள்ளார்.

உள்நாட்டிலே கிழிக்காதவர்கள், சர்வதேச அளவில் என்ன செய்வார்கள் -தேர்வு குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்'ன் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவிக்க இந்திய அணியோ 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அப்போதே இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு 50% முடிவுக்கு வந்தது.

அதே போல இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளர் செய்ய இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால், ஆரம்பத்தில் அபாரமாக தொடங்கிய இந்திய அணி பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

உள்நாட்டிலே கிழிக்காதவர்கள், சர்வதேச அளவில் என்ன செய்வார்கள் -தேர்வு குழுவை விமர்சித்த முன்னாள் வீரர்கள்!

இது தவிர கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஐசிசி கோப்பைகள் எதையும் வெல்லாமல் முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்திய அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு காரணமாக பல விஷயங்களை விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர்.

மேலும், சிறிது நாட்களுக்கு முன்னர் ICC தொடர்களில் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு இந்திய தேர்வுக் குழுவே காரணம் என இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார். இந்த நிலையில் உள்ளூர் அளவிலேயே தரமான வீரர்களை தேர்ந்தெடுக்காதவர்கள், எப்படி சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தரமான வீரர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்று வெங்கடேஷ் பிரசாத் தேர்வுக்குழுவினரை விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், "இந்திய கிரிக்கெட்டில் நிறைய சிரிக்கும் விஷயங்கள் நடக்கின்றன. அந்த வரிசையில் ரஞ்சிக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த ஒரு வீரர் தெற்கு மண்டல அணிக்காக தேர்வு செய்யப்படாத அதிசயம் நடந்துள்ளது. ரஞ்சிக் கோப்பை பயனற்றது என்பதை காட்டுகிறது. என்ன ஒரு அவமானம்” என்று கூறியுள்ளார். அதாவது ரஞ்சிக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரான சக்சேனா துலீப் கோப்பை போட்டிக்காக தென்மண்டல அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை. இதனை குறிப்பிட்டே வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

முன்னதாக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடிய தமிழக வீரர் பாபா இந்திரஜித்தை தெற்கு மண்டல அணிக்காக தேர்வு செய்யாத தேர்வுக்குழுவின் முடிவை புரிந்து கொள்ள முடியவில்லை என தினேஷ் கார்த்திக்கும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories