விளையாட்டு

"ஐபிஎல் நடத்துவது மட்டுமே சாதனையல்ல, ஒரு வீரரை கூட உருவாகவில்லை" - BCCI-யை விமர்சித்த முன்னாள் வீரர் !

ICC தொடர்களில் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு தேர்வுக் குழுவே காரணம் என இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் விமர்சித்துள்ளார்.

"ஐபிஎல் நடத்துவது மட்டுமே சாதனையல்ல, ஒரு வீரரை கூட உருவாகவில்லை" - BCCI-யை விமர்சித்த முன்னாள் வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்'ன் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவிக்க இந்திய அணியோ 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அப்போதே இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு 50% முடிவுக்கு வந்தது.

அதே போல இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளர் செய்ய இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால், ஆரம்பத்தில் அபாரமாக தொடங்கிய இந்திய அணி பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

"ஐபிஎல் நடத்துவது மட்டுமே சாதனையல்ல, ஒரு வீரரை கூட உருவாகவில்லை" - BCCI-யை விமர்சித்த முன்னாள் வீரர் !

இது தவிர கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஐசிசி கோப்பைகள் எதையும் வெல்லாமல் முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்திய அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு காரணமாக பல விஷயங்களை விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ICC தொடர்களில் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு இந்திய தேர்வுக் குழுவே காரணம் என இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியம் என கூறுகிறீர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் உள்ளவர்களிடம், கிரிக்கெட் குறித்த ஆழ்ந்த அறிவோ, பார்வையோ, திட்டமிடலோ இல்லை. எந்த ஒரு வீரரையும் இவர்கள் வளர்த்து விடவில்லை. கிடைக்கும் வீரர்களை வைத்து விளையாடுகின்றனர்.ஐபிஎல் தொடரை நடத்தி, மீடியா உரிமத்தில் பல கோடிகள் வருமானம் பார்ப்பது மட்டுமே சாதனையல்ல " என கடுமையாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories