விளையாட்டு

"நானும் மனிதன்தான், அவர்தான் என்னுடன் முதலில் மோதலில் ஈடுபட்டார்" -கோலி மேல் நவீன் உல் ஹக் குற்றச்சாட்டு!

ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடனான மோதல் குறித்து தற்போது நவீன் உல் ஹக் விளக்கமளித்துள்ளார்.

"நானும் மனிதன்தான், அவர்தான் என்னுடன் முதலில் மோதலில் ஈடுபட்டார்" -கோலி மேல் நவீன் உல் ஹக் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் லீக் போட்டியில் லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பெங்களூருவில் இந்த அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றிருந்தது.

அப்போது வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் காஹ்க்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் காஹ்க்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

"நானும் மனிதன்தான், அவர்தான் என்னுடன் முதலில் மோதலில் ஈடுபட்டார்" -கோலி மேல் நவீன் உல் ஹக் குற்றச்சாட்டு!

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை காம்பிர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி காம்பிரிடம் ஏதோ கூற கோலிக்கும் காம்பிருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

இதனிடையே நவீன் மற்றும் கோலி இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முயற்சி செய்தார். நவீனிடம் சென்று கோழியுடன் சமாதானமாக செல்ல அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு நவீன் உல் ஹாக் மறுத்து அங்கிருந்து நகர்ந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த மோதல் அதன்பின்னர் ஐபிஎல் தொடரின் இறுதிவரை பல்வேறு விதங்களில் வெளிப்பட்டது.

இந்த நிலையில், விராட் கோலியுடனான இந்த மோதல் குறித்து தற்போது நவீன் உல் ஹக் விளக்கமளித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நவீன் உல் ஹக், "விராட் கோலியுடன் நான் சண்டையைத் தொடங்கவில்லை போட்டிக்குப் பின் கைகுலுக்கிக் கொண்டபோது, அவர்தான் சண்டையை தொடங்கினார்.அந்த போட்டிக்கு பிறகு விராட் கோலிதான் என் கைகளை அழுத்தமாக பிடித்து மோதலில் ஈடுபட்டதால் திருப்பி எதிர்வினை ஆற்றினேன். நானும் ஒரு மனிதன்தான். நான் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடிய காலத்தில் இருந்தே யாரைப் பற்றியும் தவறாகப் பேசியதில்லை. ஆனால் யாராவது தவறாக என்னிடம் நடந்துக்கொண்டால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். இதை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டாலும் சரி இதுதான் நான்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories