விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் குறுக்கிடும் மழை.. போட்டி பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு ?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இங்கிலாந்துக்கே உரிய வானிலையால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் குறுக்கிடும் மழை.. போட்டி பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்திற்காக முட்டி மோத போகின்றனர். கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையாவது அதனை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தபோது அங்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டிருந்தார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என அசத்தியிருந்தார். ஆனால் இந்த முறை இருவரும் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் குறுக்கிடும் மழை.. போட்டி பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு ?

இது தவிர சமீப காலமாக இந்திய அணியில் சிறந்த நடுகள வீரராக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரும் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காயம் காரணமாக இந்திய அணி தடுமாறி வரும் என விமர்சனங்கள் எழுந்தன.

எனினும் அவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்கள் அணிவகுத்து நிலையில், தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு இணையாக வலுவான அணியாகவே காட்சியளிக்கிறது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இங்கிலாந்துக்கே உரிய வானிலையால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவ்வாறு மழை பெய்தால் போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் குறுக்கிடும் மழை.. போட்டி பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு ?

இதற்கான பதிலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி 5 நாள் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஒருநாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் ஐந்து நாளில் ஏதேனும் ஒருநாள் அல்லது சில மணி நேரங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் போட்டி ஐந்தாம் நாளுக்கு செல்லும். அதே நேரம் 5 நாள் டெஸ்ட் போட்டி முழுவதுமாக நடைபெறும் முடிவு கிடைக்காமல் போனால் ரிசர்வ் நாளுக்கு போட்டி செல்லாது.

அப்படி போட்டி டிரா அல்லது டை நிலைமைக்கு சென்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பை வழங்கப்படாமல் ஆஸ்திரேலியா -இந்தியா என இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்துகொண்டதாக அறிவிக்கப்படும். அதே போல ரிசர்வ் நாளில் போட்டி சமனில் முடிவடைந்தாலும் கோப்பை இருஅணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

banner

Related Stories

Related Stories