விளையாட்டு

"நான் பயிற்சியாளராக இருந்தபோது தேர்வுக்குழு என்ன நினைக்கிறார்கள் என்பதே தெரியாது" -ரவி சாஸ்திரி கருத்து !

தேர்வுக்குழு கூட்டம் எப்படி தொடங்குகிறது, கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது கூட எனக்கு தெரிவிக்கப்படவில்லை என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

"நான் பயிற்சியாளராக இருந்தபோது தேர்வுக்குழு என்ன நினைக்கிறார்கள் என்பதே தெரியாது" -ரவி சாஸ்திரி கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆபரேஷனில் இந்திய தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி விராட் கோலியை இந்திய கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பவில்லை. ஆனால்,கோலியின் ஈகோவின் காரணமாகவே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

தன்னை கேப்டன் பதவியில் இருந்து கங்குலிதான் நீக்கியதாக கோலி கருதி கங்குலி தன்னுடைய கேப்டன் பதவியை பறித்ததாக கோலி குற்றம்சாட்டினார்.சவுரவ் கங்குலிக்கும் விராட் கோலியை பிடிக்காது. கேப்டன் பதவி தொடர்பாக இந்திய அணிக்கு உள்ளேயே நிறைய பிரச்சனைகள் ஓடிக்கொண்டு இருந்தன" போன்ற கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

"நான் பயிற்சியாளராக இருந்தபோது தேர்வுக்குழு என்ன நினைக்கிறார்கள் என்பதே தெரியாது" -ரவி சாஸ்திரி கருத்து !

மேலும், "80% உடற்தகுதி கூட இல்லாத இந்திய நட்சத்திர வீரர்கள் சிலர், காயத்தை மறைக்க போட்டிக்கு முன்னர் உடற்தகுதி பெறுவதற்கு ஊசி போட்டுக்கொண்டு விளையாடுவார்கள். இதை ஊக்க மருந்து சோதனையில் கண்டுபிடிக்க முடியாது" என்றும் கூறி பெரும் பிரச்சனையை பற்றவைத்தார்.

இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய தேர்வுக்குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார். இந்த நிலையில், நான் இந்திய அணி பயிற்சியாளராக இருந்தபோது தேர்வுக்குழு கூட்டம் எப்படி தொடங்குகிறது, எப்படி முடிகிறது, கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது கூட எனக்கு தெரிவிக்கப்படவில்லை என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

"நான் பயிற்சியாளராக இருந்தபோது தேர்வுக்குழு என்ன நினைக்கிறார்கள் என்பதே தெரியாது" -ரவி சாஸ்திரி கருத்து !

தேர்வு குழு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் , "கிட்டத்தட்ட 7 வருடம் நான் அணியில் அங்கம் வகித்திருந்தாலும், தேர்வுக்குழு கூட்டத்தின் அருகில் கூட சென்றதில்லை. என்னையும் யாரும் அழைத்ததில்லை. எனக்கு தேர்வுக்குழுவில் பங்கேற்ற எந்த அனுபவமும் இல்லை

நீண்ட காலமாக ஒரு பயிற்சியாளராக இருக்கும் நீங்கள், அணிவீரர்களுடன் மட்டுமே நிறைய நேரம் செலவிடுகிறீர்கள். ஆனால் குறைந்தபட்சம் தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள், என்னவிதமான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதை, தலைமை பயிற்சியாளரும் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தேர்வுக்குழு கூட்டம் எப்படி தொடங்குகிறது, எப்படி முடிகிறது, கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது பற்றிய தகவல் எனக்கு எப்போதும் தெரிவிக்கப்பட்டதில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories