விளையாட்டு

மும்பைக்கு அப்புறம் பிடித்த மைதானம் எது ?- கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறிய பதில் இதுதான் !

மும்பை வான்கிடே மைதானத்திற்கு அடுத்தபடியாக எனக்கு பிடித்த மைதானம் சென்னை சேப்பாக்கம் என்று சச்சின் பதில் அளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பைக்கு அப்புறம் பிடித்த மைதானம் எது ?- கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறிய பதில் இதுதான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் புகழ்பெற்ற மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு தனி இடம் எப்போதும் உண்டு. இந்த மைதானம் கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் சீரமைக்கப்பட்ட நிலையில், புதிதாக ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகள் அமைக்கப்பட்டன.

ஆனால், இந்த கேலரிகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி சீல் வைக்கப்பட்டது. இதனால் மூடப்பட்ட அந்த கேலரிகளோடு சென்னையில் சர்வதேச போட்டிகள் நடைபெற்றன. எனினும் இந்த கேலரி பிரச்சனை காரணமாக முக்கியமான போட்டிகளை சென்னை இறந்ததாகவும் கூறப்பட்டது.

மும்பைக்கு அப்புறம் பிடித்த மைதானம் எது ?- கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறிய பதில் இதுதான் !

இந்த கேலரி தொடர்பான பிரச்சனை கடந்த 2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், 2022-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் பழைய பெவிலியன் கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளோடு புதிய பெவிலியன் கட்டிடம் கட்டப்பட்டது. அதோடு வீரர்கள் ஓய்வு அறையும் நவீனப்படுத்தப்பட்டது. இது தவிர உடற்பயிற்சிக் கூடம், உள்ளரங்க வலைபயிற்சி வசதிகளும் புதியதாக அமைக்கப்பட்டன.

மேலும், பெவிலியன் பகுதியில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்டோர் மற்றும் இந்திய அணி குறித்த பல்வேறு நினைவுச் சின்னங்களும் அங்கே வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியன் கேலரியை மாதம் கடந்த 17-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் அந்த கேலரிக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயர் சூட்டப்பட்டது.

மும்பைக்கு அப்புறம் பிடித்த மைதானம் எது ?- கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறிய பதில் இதுதான் !

இந்த நிலையில், தற்போது மும்பை வான்கிடே மைதானத்திற்கு அடுத்தபடியாக எனக்கு பிடித்த மைதானம் சென்னை சேப்பாக்கம் என்று சச்சின் பதில் அளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் #AskSachin என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டு அதன்கீழ் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்து வருகிறார்.

அதில் அசோக் ராகவன் என்பவர் மும்பை வான்கிடே மைதானத்திற்கு அடுத்தபடியாக உங்களுக்கு பிடித்தமான மைதானம் என்று சச்சினிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த சச்சின் சென்னை சேப்பாக்கம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பதில் அளித்துள்ளார்." அவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories