விளையாட்டு

”இவர் செய்த இந்த சாதனையை என்னால் நிச்சயம் செய்ய முடியாது ” -இளம் வீரரை புகழ்ந்த விராட் கோலி !

ரிங்கு சிங் 5 பந்துகளில் 5 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்தது போல என்னால் செய்ய முடியாது என விராட் கோலி கூறியுள்ளார்.

”இவர் செய்த இந்த சாதனையை என்னால் நிச்சயம் செய்ய முடியாது ” -இளம் வீரரை புகழ்ந்த விராட் கோலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஏப்ரில் 9-ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் குஜராத் அணியை ரஷித் கான் தலைமை தாங்கினார்.

இந்த போட்டியில் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ரிதிமன் சாஹா 17 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனும் கில்லும் ஜோடி சேர கில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அபினவ் மனோகர் சிறிய அதிரடி ஆட்டம் ஆடி 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

”இவர் செய்த இந்த சாதனையை என்னால் நிச்சயம் செய்ய முடியாது ” -இளம் வீரரை புகழ்ந்த விராட் கோலி !

பின்னர் இரு தமிழக வீரர்களான சாய் சுதர்சனும் விஜய் சங்கரும் நிதானமாக அணியை கட்டமைத்தனர். இதில் சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அதன் பின்னர் இறுதிக்கட்டத்தில் விஜய் சங்கர் அதிரடியாக ஜொலித்தார். 24 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் விஜய் சங்கர் 63 ரன்கள் குவிக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.

பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் குர்பாஸ் 15 ரனகளிலும் , ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் நிதேஷ் ராணா 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.எனினும் தொடர்ந்து அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 40 பந்தில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

”இவர் செய்த இந்த சாதனையை என்னால் நிச்சயம் செய்ய முடியாது ” -இளம் வீரரை புகழ்ந்த விராட் கோலி !

அடுத்த ஓவரை வீசிய கேப்டன் ரஷீத் கான் அதிரடி வீரர் ரசல், நரைன், ஷர்துல் தாகூரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி தொடரின் முதல் ஹாட் ட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார். இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வரும் நிலையில், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியும் பாராட்டியுள்ளார்.

”இவர் செய்த இந்த சாதனையை என்னால் நிச்சயம் செய்ய முடியாது ” -இளம் வீரரை புகழ்ந்த விராட் கோலி !

இது தொடர்பாகப் பேசிய அவர், " இப்போது இளம் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதைப் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. என்னால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள் சிலவற்றை இந்த இளம் வீரர்கள் செய்து முடித்து விடுகிறார்கள். ரிங்கு சிங் 5 பந்துகளில் 5 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். என்னால் இதை எல்லாம் செய்ய முடியாது. இந்த ஆட்டத்தை நான் வியந்து பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories