விளையாட்டு

சேப்பாக்கில் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த 100 சிறுவர்கள்.. அமைச்சர் உதயநிதியால் கிடைத்த அரிய வாய்ப்பு!

தனது தொகுதியில் கிரிக்கெட் ஆர்வமுள்ள 100 சிறுவர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை நேரில் காணும் வாய்ப்பை அமைச்சர் உதயநிதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

சேப்பாக்கில் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த 100 சிறுவர்கள்.. அமைச்சர் உதயநிதியால் கிடைத்த அரிய வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

சேப்பாக்கில் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த 100 சிறுவர்கள்.. அமைச்சர் உதயநிதியால் கிடைத்த அரிய வாய்ப்பு!

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ருத்துராஜ் மற்றும் கான்வே ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் பவர் பிளே முடிவில் சென்னை அணி 79 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து அதிரடியாக ஆடி 100 ரன்கள் ஜோடி சேர்ந்து அடித்த பின்னர் ருத்துராஜ் 57, கான்வே 47 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வீரர்களும் அதிரடியாக ஆட சென்னை அணி 200 ரன்களை கடந்தது. இறுதியில் தோனி பிரமாண்டமான இரண்டு சிக்ஸர் விலாச 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

சேப்பாக்கில் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த 100 சிறுவர்கள்.. அமைச்சர் உதயநிதியால் கிடைத்த அரிய வாய்ப்பு!

பின்னர் ஆடிய லக்னோ அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. பவர் பிளே ஓவர் முடிவில் சென்னை அணியை விட அதிக ரன்கள் குவித்தது. ஆனால் மொயின் அலி பந்துவீச்சில் மேயர்ஸ் 53 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே குவிக்கப்பட சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டுதுறை அமைச்சரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதியில் கிரிக்கெட் ஆர்வமுள்ள 100 சிறுவர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை - லக்னோ இடையிலான போட்டியை நேரில் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

சேப்பாக்கில் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த 100 சிறுவர்கள்.. அமைச்சர் உதயநிதியால் கிடைத்த அரிய வாய்ப்பு!

அந்த 100 சிறுவர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் போட்டியை உற்சாகமாக கண்டுகளித்தனர். சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் கட்டணம் ஆயிரக்கணக்கில் இருக்கும் நிலையில், அதனை நேரில் பார்க்க சிறுவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உதயநிதி ஸ்டாலினை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories