விளையாட்டு

”அவருக்கு என்ன தெரியும்? அவர் கருத்த குப்பையில் போடுங்க..” -ரவி சாஸ்திரி கருத்துக்கு ரோகித் சர்மா பதிலடி!

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கருத்துக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா காட்டமாக பதிலளித்துள்ளார்.

”அவருக்கு என்ன தெரியும்? அவர் கருத்த குப்பையில் போடுங்க..” -ரவி சாஸ்திரி கருத்துக்கு ரோகித் சர்மா பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

”அவருக்கு என்ன தெரியும்? அவர் கருத்த குப்பையில் போடுங்க..” -ரவி சாஸ்திரி கருத்துக்கு ரோகித் சர்மா பதிலடி!

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வியை பலரும் விமர்சித்து வந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்ச்சியாளர் ரவி சாஸ்திரி அதீத நம்பிக்கையில் அலட்சியமாக இருந்ததால்தான் மூன்றாவது ஆட்டத்தில் தோல்வியை தழுவியதாக விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் அவரின் கருத்துக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா காட்டமாக பதிலளித்துள்ளார்.

”அவருக்கு என்ன தெரியும்? அவர் கருத்த குப்பையில் போடுங்க..” -ரவி சாஸ்திரி கருத்துக்கு ரோகித் சர்மா பதிலடி!

நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு ரோகித் சர்மாவின் ரவி சாஸ்திரியின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா “ இரண்டு டெஸ்ட் போட்டியை வென்றால் வெளியே இருப்பவர்கள் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள்.இந்த பேச்சு அனைத்தும் குப்பையில் போட வேண்டும். நீங்கள் எப்போதுமே உங்கள் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே நினைப்பீர்கள்.

எங்கள் அணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிலர் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக கூறி வருகிறார்கள். நாங்கள் அதிக நம்பிக்கையுடன் அலட்சியமாக இருப்பதாக வெளியே இருக்கும் நபர்கள் நினைக்கிறார்கள் என்றால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.ரவி சாஸ்திரி ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவருக்கு வீரர்கள் எப்படி தயாராகும்? என்ன பேசிக் கொள்வோம் என்று அனைத்தும் தெரியும். ஆனால் அப்படியும் அவர் இப்படி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories