விளையாட்டு

எம்பாப்பேயை கிண்டல் செய்த அர்ஜென்டினா வீரர்கள்.. விசாரணையை தொடங்கிய FIFA.. சிக்குவாரா மெஸ்ஸி ?

பிரான்ஸ் வீரர் எம்பாப்பேயை கிண்டல் செய்த அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மீதான விசாரணையை பிபா அமைப்பு தொடங்கியுள்ளது.

எம்பாப்பேயை கிண்டல் செய்த அர்ஜென்டினா வீரர்கள்.. விசாரணையை தொடங்கிய FIFA.. சிக்குவாரா மெஸ்ஸி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது. இறுதியில் போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்ற அர்ஜென்டினா வீரர்களும் திறந்த வெளி பேருந்தில் உலகக்கோப்பையை வைத்து ரசிகர்களிடையே ஊர்வலம் சென்றனர்.

அப்போது உலககோப்பையில் சிறந்த கோல் கீப்பர் விருது பெற்ற அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ், பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் முகம்பதித்த குழந்தை வடிவ பொம்மையை கையில் வைத்து அவரை கேலி செய்தார். இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட அர்ஜென்டினா அணியை வெளியேற்றும் அளவு வெறித்தனமான ஆட்டத்தை ஆடிய எம்பாப்பே ஆடியிருந்தார். ஆனால் அவரை விமர்சித்த எமிலியானோ மார்டினஸூக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

எம்பாப்பேயை கிண்டல் செய்த அர்ஜென்டினா வீரர்கள்.. விசாரணையை தொடங்கிய FIFA.. சிக்குவாரா மெஸ்ஸி ?

இது தொடர்பாக பிபா அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஃபிஃபா எனப்படும் அனைத்­து­ல­கக் காற்­பந்­துக் கூட்­ட­மைப்பும் தற்போது விசாரணையை தொண்டங்கியுள்ளது. பல்வேறு தரப்பில் நடத்தப்படும் இந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் மற்றும் அப்போது உடனிருந்த அர்ஜென்டினா வீரர்களுக்கு அபராதம் போன்றவை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories