விளையாட்டு

அப்பாடா 17.5 கோடி செலவு செய்தது வீண்போகவில்லை.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல்!

ஐபிஎல் தொடரில் பந்துவீச தடை விதிக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவலை ஆஸ்திரேலிய வீரர் காமெரூன் கிரீன் மறுத்துள்ளார்.

அப்பாடா 17.5 கோடி செலவு செய்தது வீண்போகவில்லை.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது.அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐபிஎல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

அப்பாடா 17.5 கோடி செலவு செய்தது வீண்போகவில்லை.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல்!

இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய ஆள் ரவுண்டர் காமெரூன் கிரீனை மும்பை அணி 17.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க அணியுடன் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது இவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் அவரால் அடுத்த நான்கு வாரங்களுக்கும் பந்துவீச இயலாது என்றும், கூடுதலாக நான்கு வாரங்கள் நிபந்தனைகளுடன் கூடிய பந்துவீச்சிலேயே ஈடுபட வேண்டும் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதன் காரணமாக அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காமெரூன் கிரீன் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வரை பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் கூட அதில் அவர் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அப்பாடா 17.5 கோடி செலவு செய்தது வீண்போகவில்லை.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல்!

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை முன்வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த கட்டுப்பாடை விதித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த தகவலை ஆஸ்திரேலிய வீரர் காமெரூன் கிரீன் மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், சமீபகாலமாக இப்படியொரு செய்தி உலவுவதை நானும் கவனித்தேன். எங்கிருந்து இத்தகவல் கிடைத்தது எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், "இந்தியாவில் விளையாடவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னுரிமை அளிக்கிறேன். முதல் டெஸ்டுக்குத் தகுதி பெற நானும் ஸ்டார்க்கும் முயன்று வருகிறோம். ஐபிஎல் போட்டியில் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்" என்றும் பேசியுள்ளார். இந்த சம்பவம் மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories