விளையாட்டு

"இதை செய்தால் உங்களுக்கு நல்ல கரியர் அமையும்".. தனது இளம் டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா அட்வைஸ்!

அனைத்து வீரர்களுக்குமே என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு என இந்திய அணியின் டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

"இதை செய்தால் உங்களுக்கு நல்ல  கரியர் அமையும்".. தனது இளம் டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 தொடர் இன்று தொடங்குகிறது. ரெகுலர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்தில் காயமடைந்து பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இதுதான். இந்தியாவின் 2023 உலகக் கோப்பை திட்டத்தில் மிக முக்கிய அங்கமாக பண்ட் இருந்த நிலையில், இப்போது அவர் இல்லாமல் களமிறங்குகிறது இந்தியா.

இந்நிலையில் இத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார் இத்தொடருக்கான இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா. பண்ட் விபத்து குறித்தும், அவர் இல்லாததால் மற்ற வீரர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு பற்றியும் அவர் பேசினார்.

"அது மிகவும் துருதிருஷ்டவசமான நிகழ்வு. அவர் விரைவில் குணமடைய ஒட்டுமொத்த அணியும் வேண்டிக்கொண்டிருக்கிறது. எங்களுடைய அன்பும் ஆதரவும் எப்போதும் பண்டுக்கு இருக்கும். இந்த அணிக்கு அவர் மிகவும் முக்கியமான வீரர். ஆனால் இப்போதைய சுழ்நிலை நம் அனைவருக்குமே தெரியும். இப்போது பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும். பண்ட் இருந்திருந்தால், அது மிகப் பெரிய பலமாக இருந்திருக்கும். அவர் அப்படிப்பட்ட வீரர். அவர் இல்லாத நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்" என்று கூறினார் ஹர்திக்.

"இதை செய்தால் உங்களுக்கு நல்ல  கரியர் அமையும்".. தனது இளம் டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா அட்வைஸ்!

இந்திய அணியின் அணுகுமுறை குறித்துப் பேசிய ஹர்திக், "திட்டங்களை வகுத்துவிட்டோம். ஒரு குறிப்பிட்ட விதத்தில் விளையாடவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். ஐபிஎல் தொடருக்கு முன்பாக மொத்தம் 6 போட்டிகள் தான் இருக்கின்றன. அதனால் இப்போது நிறைய விஷயங்களை சோதித்துப் பார்க்க முடியாது. ஆனாக் எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்கள் வகுத்து எது அணிக்கு சரியானது என்று பரிசோதித்துப் பார்ப்போம்.

அதுமட்டுமல்லாமல் அனைவருக்கும் போதுமான வாய்ப்புகள் கிடைக்கிறதா என்பதும் அவசியம். சரியான நேரத்தில், என்ன செய்யவேண்டும் என்பதை யோசிப்போம். யாருக்கு என்ன ரோல் என்பதை முன்பும் முடிவு செய்துகொண்டிருந்தோம். இப்போதும் அது நடைமுறையில் இருக்கிறது. என்னுடைய அணியைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

"இதை செய்தால் உங்களுக்கு நல்ல  கரியர் அமையும்".. தனது இளம் டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா அட்வைஸ்!

"உலகக் கோப்பைக்கு முன்பாக நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். எங்களுடைய அணுகுமுறை ஒன்றாகத்தான் இருந்தது. உலகக் கோப்பையில் நாம் நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. முன்பைப் போலவே எங்கள் அணுகுமுறை இல்லை என்பதும் உண்மை தான். இப்போது நாங்கள் வீரர்களிடம் சொல்லியிருப்பது களத்துக்குள் போய் உங்கள் ஆட்டத்தைக் காட்டுங்கள் என்பதுதான்" என்று கூறியிருக்கிறார் பாண்டியா.

"அனைத்து வீரர்களுக்குமே என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. இங்கு இருப்பவர்கள், இந்தியாவிலேயே மிகச் சிறந்த கிரிக்கெட்டர்கள். அதை அவர்கள் நம்பும் வகையில் செய்யவேண்டும். இந்தக் களத்தில் நாம் சிறந்தவர்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அவர்களுக்கு நம்பிக்கை வரவைக்கவேண்டும். அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கும் என்று தோன்றவில்லை. அனைவருக்கும் நல்லதொரு கரியர் அமையும்" என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.

banner

Related Stories

Related Stories