விளையாட்டு

“நான் கொடுத்த கடனை திருப்பி கொடு..” : அதிக ஏலம் எடுக்கப்பட்ட நிக்கோலஸ் பூரானிடம் கடனை வசூலிக்கும் கெயில்!

“நிக்கோலஸ் பூரானிடம் இப்போது பணம் வந்துவிட்டது. உன்னிடம் தான் பணம் வந்துவிட்டதே எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிக்கொடு” என கிண்டல் அடித்துள்ளார்.

“நான் கொடுத்த கடனை திருப்பி கொடு..” : அதிக ஏலம் எடுக்கப்பட்ட நிக்கோலஸ் பூரானிடம் கடனை வசூலிக்கும் கெயில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐ.பி.எல் மினி ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் 16கோடி ரூபாயிக்கு நிக்கோலஸ் பூரானை எடுத்ததற்கு கடும் விமர்சனம் எழுந்தது. அதிரடி மேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக அறியப்பட்ட நிக்கோலஸ் பூரான் ஆரம்பக்காலத்தில் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி, தனது அணிக்கு வெற்றியை ஈட்டித்தந்தார்.

பின்னர் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடமல் அணிக்கு தோல்வியைப் பெற்றுக்கொடுத்தார். மேலும் எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் நிக்கோலஸ் பூரான் ஏற்படுத்தாமல் இருந்தார். இதன்காரணமாக ஐதராபாத்தில் கடந்த முறை நடந்த கூட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது. இது ரசிகர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.

“நான் கொடுத்த கடனை திருப்பி கொடு..” : அதிக ஏலம் எடுக்கப்பட்ட நிக்கோலஸ் பூரானிடம் கடனை வசூலிக்கும் கெயில்!

இந்நிலையில், பெரும் தொகைக் கொடுக்கப்பட்டு நிக்கோலஸ் பூரான் வாங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த முறை நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் 14 முறை விளையாடிய நிக்கோலஸ் பூரான் வெறும் 360 ரன்களை மட்டும் எடுத்திருந்தார். மேலும் அதற்கு முந்தைய ஐ.பி.எஸ் தொடர்களிலும் 85 ரன்கள் மட்டும் எடுத்ததால் ஐதராபாத் அணி அவரை அணியில் இருந்து நீக்கியது. ஆனால் தற்போது அதிக விலைக்கு எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நிக்கோலஸ் பூரானை கேலி செய்து வெஸ்ட் இண்டீஸ் விரர் கெயில் அதிகவிலைக்குச் சென்ற வீரர் இனி தனி பிரைவெட் ஜெட்டில் பயணிக்கலாம் என்றார். மேலும் நிக்கோலஸ் பூரானிடம் நான் கொடுத்த கடனை மட்டும் திரும்பி கேட்கிறேன். அவருக்கு இப்போது பணம் வந்துவிட்டது எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் அவரது சமூக வலைதள பதிவில், “உன்னிடம் தான் பணம் வந்துவிட்டதே எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிக்கொடு” என கிண்டல் அடித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories