விளையாட்டு

"இந்த வீரர் எதிரணியின் நம்பிக்கையையே உடைத்துவிடுவார்" -இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய தினேஷ் கார்த்திக் !

அஸ்வின் மிகவும் தரமான ஆல்ரவுண்டர் எந்த சூழலிலும் அவரை நம்பலாம் என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

"இந்த வீரர் எதிரணியின் நம்பிக்கையையே உடைத்துவிடுவார்" -இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய தினேஷ் கார்த்திக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான இவர், இந்தியா அணியின் முக்கியமான வீரராக தற்போதும் நீடித்து வருகிறார்.

இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் மற்றும் டி20 அணியிலிருந்து ஒதுக்கப்பட்டபோது அவரின் பயணம் முடிந்தது என்றே கருதப்பட்டது.

"இந்த வீரர் எதிரணியின் நம்பிக்கையையே உடைத்துவிடுவார்" -இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய தினேஷ் கார்த்திக் !

ஆனால், தனது சிறப்பான செயல்பாடு காரணமாக ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்த அவர் சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம்பிடித்து அசத்தினார். தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடப்பெற்று ஆடி வருகிறார்.

சிறந்த பந்துவீச்சாளரான இவர், சிறந்த பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 3000 ரன்கள் அடித்திருக்கிகும் இவர் அதில் 5 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடித்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில்கூட இந்திய அணி சற்று தடுமாறியபோது 58 ரன்கள் குவித்து அணி நல்ல இலக்கை எட்ட உதவினார்.

"இந்த வீரர் எதிரணியின் நம்பிக்கையையே உடைத்துவிடுவார்" -இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய தினேஷ் கார்த்திக் !

இந்த நிலையில், அஸ்வின் மிகவும் தரமான ஆல்ரவுண்டர் எந்த சூழலிலும் அவரை நம்பலாம் என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "அஸ்வினின் பந்துவீச்சை பற்றி பேச தேவையே இருக்காது. பேட்டிங்கில் ஐந்து சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். தற்போதும் சிறப்பாக ஆடி அவரது பேட்டிங் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்து இருக்கிறார்.

துவக்க வீரராகவும் களமிறங்கி தமிழக அணிக்கு அசத்தியிருக்கிறார். அவரால் எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் இறங்கி அணிக்கு பங்களிப்பு அளிக்க முடியும். எட்டாவது வீரராக அவர் இறங்கும்போது கூட விரைவாக விக்கெட் எடுத்து விடலாம் என எதிரணி நினைத்தால் அஸ்வின் களமிறங்கி நீண்ட நேரம் மைதானத்தில் இருந்து அந்த நம்பிக்கையை உடைத்துவிடுவார். 8வது இடத்தில் இறங்கி ஐந்து சதங்கள் அடிப்பது எளிதல்ல" என புகழாரம் சூட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories