விளையாட்டு

"இந்தியாவை தோற்கடித்தபின்னர் எங்களிடம் யாரும் காசே வாங்கவில்லை" -நினைவலைகளை பகிர்ந்த பாக்.வீரர் ரிஸ்வான்!

இந்திய அணியை தோற்கடித்த பிறகு நான் பாகிஸ்தானில் உள்ள எந்த கடைக்கு சென்று பொருள் வாங்கினாலும் என்னிடம் யாரும் பணமே வாங்கவில்லை என பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.

"இந்தியாவை தோற்கடித்தபின்னர் எங்களிடம் யாரும் காசே வாங்கவில்லை" -நினைவலைகளை பகிர்ந்த பாக்.வீரர் ரிஸ்வான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பாகிஸ்தான் அணியம் மோதின. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வியை சந்தித்தது.

அதுவரை ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியதே இல்லாத நிலையில் அந்த தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது. இதன் காரணமாக அந்த வெற்றி பாகிஸ்தானில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

"இந்தியாவை தோற்கடித்தபின்னர் எங்களிடம் யாரும் காசே வாங்கவில்லை" -நினைவலைகளை பகிர்ந்த பாக்.வீரர் ரிஸ்வான்!

அந்த போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 151-7 என்ற ஸ்கோரை எட்டியது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது.

அந்த போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் ரிஸ்வான் 79 ரன்களையும் பாபர் அசாம் 68 ரன்களையும் எடுத்து போட்டியை 18 வது ஓவரிலேயே முடித்தனர்.இந்த நிலையில், இந்த வெற்றிக்குறித்து பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

"இந்தியாவை தோற்கடித்தபின்னர் எங்களிடம் யாரும் காசே வாங்கவில்லை" -நினைவலைகளை பகிர்ந்த பாக்.வீரர் ரிஸ்வான்!

இது தொடர்பாக பேசிய அவர், "2021 உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பிறகு நான் பாகிஸ்தானில் உள்ள எந்த கடைக்கு சென்று எந்த பொருள் வாங்கினாலும் என்னிடம் யாரும் பணமே வாங்கவில்லை. உங்களுக்கு எல்லாமே இலவசம்தான் என்று சொன்னார்கள்.அப்போழுது தான் எனக்கு புரிந்தது. பாகிஸ்தான் மக்களுக்கு அந்த வெற்றி எவ்வளவு முக்கியமாக பார்க்கிறார்கள்என்று" என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories