விளையாட்டு

வாயில் இருந்து கொட்டிய ரத்தம்.. கேட்ச் பிடிக்கும் போது 4 பற்களை இழந்த இலங்கை வீரர்: அதிர்ச்சி Video!

கேட்ச் பிடிக்கும் போது இலங்கை வீரரின் நான்கு பற்கள் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாயில் இருந்து கொட்டிய ரத்தம்.. கேட்ச் பிடிக்கும் போது 4 பற்களை இழந்த இலங்கை வீரர்: அதிர்ச்சி Video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விளையாட்டு என்றாலே அடிபடுவது சகஜமான ஒன்றுதான். இதிலும் கால்பந்து விளையாட்டு என்றால் வீரர்களுக்கு அடிக்கடி கால் முறிவு பிரச்சனைகளை சந்தித்து பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருப்பார்கள். இதே நிலைதான் கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும்.

கடைசியாக நடந்த வங்கதேச போட்டியின் போது கூட பந்தைப் படிக்கும் போது ரோகித் சர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. பிறகு அதற்குச் சிகிச்சை எடுத்து கொண்டு கடைசி நேரத்தில் பேட் செய்து 50 ரன்களை அடித்து அசத்தினார்.

வாயில் இருந்து கொட்டிய ரத்தம்.. கேட்ச் பிடிக்கும் போது 4 பற்களை இழந்த இலங்கை வீரர்: அதிர்ச்சி Video!

இந்நிலையில் இலங்கை வீரர் ஒருவர் போட்டியின் போது காயம் ஏற்பட்ட சம்பவம் தான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் டிசம்பர் 6ம் தேதி பால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. அப்போது நான்காவது ஓவரில் கார்லோஸ் பிராத் வைட் தூக்கி அடித்த பந்தை பால்கன்ஸ் வீரர் கருணாரத்னா கேட்ச் பிடிக்கச் சென்றார்.

அப்போது, அந்த பந்தை அவர் கேட்ச் பிடித்து சில நிமிடத்திலேயே அவரது வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்து சக வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர்தான் கேட்ச் பிடிக்கும் போது பந்து அவரது வாயில் தாக்கியது தெரியவந்தது. பிறகு அவர் மைதானத்திலிருந்து வெளியே உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதில் 4 பற்கள் அகற்றப்பட்டுள்ளது.

தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், அடுத்த போட்டியில் விளையாடுவார் எனவும் பால்கன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories