விளையாட்டு

வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் நீக்கம்.. அதிரடியாக அறிவித்த BCCI.. காரணம் என்ன ?

வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் நீக்கம்.. அதிரடியாக அறிவித்த BCCI.. காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவைக் கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி காட்டியது. இதற்கிடையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றது. அந்த அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றது.

வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் நீக்கம்.. அதிரடியாக அறிவித்த BCCI.. காரணம் என்ன ?

அதனைத் தொடர்ந்து ஷிகர் தவன் தலைமையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதன் முதல் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஆடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரிஷப் பந்த் அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லையா என கேள்வி எழுந்தது.

வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் நீக்கம்.. அதிரடியாக அறிவித்த BCCI.. காரணம் என்ன ?

ஆனால் காயம் காரணமாகி ஒருநாள் தொடரில் இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளதாகவும் அவர் அடுத்ததாக டெஸ்ட் தொடரின்போது அணியில் இணைவார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தொடரில் இருந்து அகஸர் படேலும் நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரின் நீக்கத்துக்கான காரணத்தை பிசிசிஐ வெளியிடவில்லை.

banner

Related Stories

Related Stories