விளையாட்டு

ரொனால்டோவை வச்சி செய்யும் மெஸ்ஸி ரசிகர்கள்.. ரொனால்டோவின் தவறால் போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வி !

தென்கொரிய அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ செய்த தவறு காரணமாக அவர் சமூகவலைத்தளத்தில் கிண்டலுக்குள்ளாகியுள்ளார்.

ரொனால்டோவை வச்சி செய்யும் மெஸ்ஸி ரசிகர்கள்..  ரொனால்டோவின் தவறால் போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் நேற்றொரு முடிவுக்கு வந்த நிலையில், காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று நடைபெறவுள்ளது.

இதனிடையே நேற்று நடைபெற்ற லீக் சுற்றின் இறுதிப்போட்டிக்கு வெகுவிறுவிறுப்பாக நடைபெற்றன. நேற்றைய போட்டியில் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்ற ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லமுடியும் என்ற நிலையில் தென்கொரிய அணியும் மோதின.

ரொனால்டோவை வச்சி செய்யும் மெஸ்ஸி ரசிகர்கள்..  ரொனால்டோவின் தவறால் போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வி !

இந்த போட்டியின் 4-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரிக்கார்டோ கோர்ட்டா அணிக்கு முதல் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து பதில் கோல் அடிக்க முயன்ற கொரியா அணிக்கு போர்ச்சுகல் நட்சத்திரம் ரொனால்டோவின் தயவால் 25-வது நிமிடத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கார்னர் கிக் பந்தை தென்கொரிய வீரர் அடிக்க அது தடுப்பாட்டம் செய்த ரொனால்டோவின் முதுகில் பட்டு கொரிய வீரர் கிம் யோங்குக்கு செல்ல அவர் அபாரமாக அதனை கோலாக்கினார்.

அதன்பின்னர் 41 -வது நிமிடத்தில் ரொனால்டோவுக்கு கிடைத்த மிக எளிதான கோல் வாய்ப்பை அவர் தவறவிட்டார். அதன்பின் இரண்டாம் பத்தியில் தென்கொரிய வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டம் முடிய சிறிதுநேரம் இருந்த நிலையில், கூடுதல் நேரத்தில் தென்கொரிய நட்சத்திரம் ஹீயுங் மின் சன் தங்களுடைய கோல் போஸ்ட் அருகில் இருந்து பந்தை எடுத்து வந்து அதனை சக வீரர் ஹி சென்னுக்கு பாஸ் செய்ய அவர் அதனை கோலாக்கினார்.

ரொனால்டோவை வச்சி செய்யும் மெஸ்ஸி ரசிகர்கள்..  ரொனால்டோவின் தவறால் போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வி !

அதன் பின்னர் இருஅணிகளும் கோல் அடிக்காத நிலையில் தென்கொரிய அணி 2-1 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் ரொனால்டோ செய்த தவறு காரணமாக அவர் சமூகவலைத்தளத்தில் கிண்டலுக்குள்ளானார். அதிலும் குறிப்பாக அவரின் சக போட்டியாளரான மெஸ்ஸியின் ரசிகர்கள் அவரை மையமாக வைத்து மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories