விளையாட்டு

இரண்டு முன்னாள் உலகசாம்பியன்களை வீழ்த்திய ஆசிய சாம்பியன்.. ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எப்படி ?

ஜப்பான் அணி முதல் போட்டியில் ஜெர்மனி அணியையும், கடைசி சுற்றில் ஸ்பெயின் அணியையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இரண்டு முன்னாள் உலகசாம்பியன்களை வீழ்த்திய ஆசிய சாம்பியன்.. ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்தசுற்றுக்கு முன்னேறுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளதால் போட்டிகள் சுவாரஸ்யமாகியுள்ளது.

நேற்று குரூப் E பிரிவில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணியும் ஆசிய சாம்பியன் ஜப்பான் அணியும் மோதியது. அதேநேரத்தில் மற்றொரு மைதானத்தில் ஜெர்மனி அணியும் கோஸ்டாரிகா அணியும் மோதியது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

இரண்டு முன்னாள் உலகசாம்பியன்களை வீழ்த்திய ஆசிய சாம்பியன்.. ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எப்படி ?

ஜெர்மனி அணியும் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தினாலும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஸ்பெயின் -ஜப்பான் அணிகள் மோதும் போட்டியை முன்வைத்தே இருந்தது. ஸ்பெயின் ஜப்பானை வீழ்த்தினாலோ அல்லது அந்த போட்டி சமனில் முடிவடைந்தாலோ ஜெர்மனி கோஸ்டாரிகா அணியை வீழ்த்தினாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

அதேநேரம் ஜப்பான் ஸ்பெயினை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி ஜெர்மனி கோஸ்டாரிகா அணிக்கு எதிராக அதிக கோல் எடுத்தாலும் ஜெர்மனிக்கு வாய்ப்பிருந்தது என்றாலும் கிட்டத்தட்ட அது சாத்தியமே இல்லாத நிலை. காரணம் தனது முதல் லீக் போட்டியில் ஸ்பெயின் கோஸ்டாரிகா அணியை 7-0 என வீழ்த்தியிருந்தது. ஆனால் கோஸ்டாரிகா அணி ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் அணி ஸ்பெயினை வீழ்த்தியிருந்தால் முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஸ்பெயின் என இரண்டு அணிகளும் தொடரில் இருந்து வெளியேறும்.

இரண்டு முன்னாள் உலகசாம்பியன்களை வீழ்த்திய ஆசிய சாம்பியன்.. ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எப்படி ?

இந்த நிலையில், நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் -ஜப்பான் மோதலின் 11 நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மொராட்டா கோல் அடித்து அசத்தினார். முதல் பாதி வரை ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் தான் இருந்தது. அதேநேரம் ஜெர்மனி அணியும் 1-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகா அணியுடனான போட்டியில் முன்னிலையில் இருந்தது.

ஆனால் இரண்டாம் பாதி தொடங்கிய இரண்டு நிமிடத்தில் ஜப்பான் அணியின் ரிஸ்ட்டு டோன் கோல் அடித்து தனது அணி ஆட்டத்தை சமன் செய்ய உதவினார். ஆனால் அடுத்ததாக 50-வது நிமிடத்தில் ஜப்பான் அணி வீரர் ஆவ் டனாக்கா மற்றொரு கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு முன்னர் அந்த பந்தை ஜப்பானிய வீரர் கோவ்ரு மிட்டோமா பாஸ் செய்யும் முன்னரே எல்லை கோட்டை தாண்டி சென்றதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.

இரண்டு முன்னாள் உலகசாம்பியன்களை வீழ்த்திய ஆசிய சாம்பியன்.. ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எப்படி ?

ஆனால், அந்த முடிவு VAR மூலம் பரிசோதனைப்பட்ட நிலையில், பந்தின் கீழ்பாகம் எல்லைக்கோட்டை தாண்டியிருந்தாலும், அதன் சைடு பக்கம் இருக்கும் பந்தின் வளைந்தபாகம் எல்லைக்கோட்டுக்கு மேலே மயிரளவு உள்ளே இருந்ததாக உறுதிசெய்யப்பட்டது.

FIFA வின் விதிமுறையின்படி ஃபிபா விதிமுறைப்படி பந்து தரையில் இருக்கும் பகுதி மாத்திரமல்லாமல், அதன் மேற்புற வளைவையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது பந்தின் வளைவு கோட்டுக்கு மேலே இருந்தாலும் பந்து கோட்டைத் தொட்டிருப்பதாகவே கருதப்பட்ட வேண்டும் என கூறியிருப்பதால் இது கோல் என அறிவிக்கப்பட்டது.

இரண்டு முன்னாள் உலகசாம்பியன்களை வீழ்த்திய ஆசிய சாம்பியன்.. ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எப்படி ?

அதன்பின்னர் இறுதிவரை ஸ்பெயின் வீரர்களால் பதில்கோல் அடக்கமுடியாத நிலையில், ஜப்பான் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதேநேரம் ஜெர்மனி கோஸ்டாரிகாவை வீழ்த்தியிருந்தாலும் கோல் அடிப்படையில் ஜெர்மனி 3-ம் இடம் பிடித்து முதல் சுற்றோடு வெளியேறியது.

ஜெர்மனி கோஸ்டாரிகா மோதிய போட்டியிலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஜெர்மனி வீரர் நேப்ரி 9-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின்னர் கோஸ்டாரிகா அணி 57,மற்றும் 69-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. போட்டி முடிவு இப்டியே 2-1 என முடிந்திருந்தால் ஸ்பெயின் அணிகூட தொடரில் இருந்து வெளியேறியிருக்கும்.

இரண்டு முன்னாள் உலகசாம்பியன்களை வீழ்த்திய ஆசிய சாம்பியன்.. ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எப்படி ?

ஆனால், ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து 3 கோல் அடித்தனர். இதனால் 2-4 என்ற கணக்கில் கோஸ்டாரிகா அணியை ஜெர்மனி வீழ்த்தியது. இந்த பிரிவில் ஜப்பான் 6 புள்ளிகள் பெற்று முதல் இடம்பிடித்த நிலையில், ஸ்பெயின் அணி மற்றும் ஜெர்மனி அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தன. எனினும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 4 முறை உலகசாம்பியன் ஜெர்மனி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையின் குரூப் பிரிவோடு வெளியேறுகிறது. இந்த போட்டியில் ஜப்பான் அணி முதல் போட்டியில் ஜெர்மனி அணியையும், கடைசி சுற்றில் ஸ்பெயின் அணியையும் வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது. இதன் மூலம் இரண்டு முன்னாள் சாம்பியன்களை வீழ்த்தி அந்த அணி சாதனை படைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories