விளையாட்டு

வென்றும் மயிரிழையில் உலககோப்பையில் இருந்து வெளியேறிய ஜெர்மனி.. பரபரப்பான 50வது நிமிடத்தில் நடந்தது என்ன?

4 முறை உலகசாம்பியன் ஜெர்மனி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையின் குரூப் பிரிவோடு வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வென்றும் மயிரிழையில் உலககோப்பையில் இருந்து வெளியேறிய ஜெர்மனி.. பரபரப்பான 50வது நிமிடத்தில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மயிரிழை என்பது அடிக்கடி பலர் பயன்படுத்துவதுதான். மயிரிழையில் தவறிய வாய்ப்பு, மயிரிழையில் வெற்றியை தவறவிட்டார் என்பது போன்ற வார்த்தைகள் அடிக்கடி நாம் படித்திருப்போம். ஆனால் அதில் 99.99 % சம்பவங்கள் ஒரு உதாரணத்துக்காகதான்.

உண்மையில் மயிரிழையில் தவறிய சம்பவங்கள் எப்போதாவது ஒருமுறை நடைபெறும் ஒன்றுதான். ஆனால் அதுவரலாற்றின் முக்கியமான நேரங்களில் நடைபெறும்போது அது சரித்திரமாகிவிடுகிறது. அப்படி ஒரு சரித்திர சம்பவம்தான் நேற்று ஸ்பெயின் -ஜப்பான் அணிகள் மோதிய போட்டியில் நடந்துள்ளது.

ஜப்பான் அணி உண்மையில் மயிரிழை வித்தியாசத்தில் அடித்த அந்த கோல்தான் 4 முறை உலகசாம்பியனான ஜெர்மனி அணியை குரூப் சுற்றோடு வெளியேற்றியுள்ளது. அந்த கோல் வேறு போட்டிகளில் நடந்திருந்தால் சிறிது பரபரப்பாக பேசப்பட்டு அடங்கியிருக்கும். ஆனால் முக்கியமான நேரத்தில் அது நடந்துள்ளதால் அந்த மயிரிழை சம்பவம் ஜெர்மனியின் கால்பந்து வரலாறு பேசப்படும்போதெல்லாம் பேசப்படும் சரித்திரமாகியுள்ளது.

வென்றும் மயிரிழையில் உலககோப்பையில் இருந்து வெளியேறிய ஜெர்மனி.. பரபரப்பான 50வது நிமிடத்தில் நடந்தது என்ன?

சரி என்னதான் நடந்தது? கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நேற்று முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணியும் ஆசிய சாம்பியன் ஜப்பான் அணியும் மோதியது. அதேநேரத்தில் மற்றொரு மைதானத்தில் ஜெர்மனி அணியும் கோஸ்டாரிகா அணியும் மோதியது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

ஜெர்மனி அணியும் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தினாலும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஸ்பெயின் -ஜப்பான் அணிகள் மோதும் போட்டியை முன்வைத்தே இருந்தது. ஸ்பெயின் ஜப்பானை வீழ்த்தினாலோ அல்லது அந்த போட்டி சமனில் முடிவடைந்தாலோ ஜெர்மனி கோஸ்டாரிகா அணியை வீழ்த்தினாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

அதேநேரம் ஜப்பான் ஸ்பெயினை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி ஜெர்மனி கோஸ்டாரிகா அணிக்கு எதிராக அதிக கோல் எடுத்தாலும் ஜெர்மனிக்கு வாய்ப்பிருந்தது என்றாலும் கிட்டத்தட்ட அது சாத்தியமே இல்லாத நிலை. காரணம் தனது முதல் லீக் போட்டியில் ஸ்பெயின் கோஸ்டாரிகா அணியை 7-0 என வீழ்த்தியிருந்தது. ஆனால் கோஸ்டாரிகா அணி ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் அணி ஸ்பெயினை வீழ்த்தியிருந்தால் முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஸ்பெயின் என இரண்டு அணிகளும் தொடரில் இருந்து வெளியேறும்.

வென்றும் மயிரிழையில் உலககோப்பையில் இருந்து வெளியேறிய ஜெர்மனி.. பரபரப்பான 50வது நிமிடத்தில் நடந்தது என்ன?

இந்த நிலையில், நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் -ஜப்பான் மோதலின் 11 நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மொராட்டா கோல் அடித்து அசத்தினார். முதல் பாதி வரை ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் தான் இருந்தது. அதேநேரம் ஜெர்மனி அணியும் 1-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகா அணியுடனான போட்டியில் முன்னிலையில் இருந்தது.

ஆனால் இரண்டாம் பாதி தொடங்கிய இரண்டு நிமிடத்தில் ஜப்பான் அணியின் ரிஸ்ட்டு டோன் கோல் அடித்து தனது அணி ஆட்டத்தை சமன் செய்ய உதவினார். ஆனால் அடுத்ததாக 50-வது நிமிடத்தில் ஜப்பான் அணி வீரர் ஆவ் டனாக்கா மற்றொரு கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு முன்னர் அந்த பந்தை ஜப்பானிய வீரர் கோவ்ரு மிட்டோமா பாஸ் செய்யும் முன்னரே எல்லை கோட்டை தாண்டி சென்றதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த முடிவு VAR மூலம் பரிசோதனைப்பட்ட நிலையில், பந்தின் கீழ்பாகம் எல்லைக்கோட்டை தாண்டியிருந்தாலும், அதன் சைடு பக்கம் இருக்கும் பந்தின் வளைந்தபாகம் எல்லைக்கோட்டுக்கு மேலே மயிரளவு உள்ளே இருந்ததாக உறுதிசெய்யப்பட்டது. மேலே சொல்லி வந்த அந்த மயிரிழை சம்பவம் இதுதான்.

FIFA வின் விதிமுறையின்படி ஃபிபா விதிமுறைப்படி பந்து தரையில் இருக்கும் பகுதி மாத்திரமல்லாமல், அதன் மேற்புற வளைவையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது பந்தின் வளைவு கோட்டுக்கு மேலே இருந்தாலும் பந்து கோட்டைத் தொட்டிருப்பதாகவே கருதப்பட்ட வேண்டும் என கூறியிருப்பதால் இது கோல் என அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் இறுதிவரை ஸ்பெயின் வீரர்களால் பதில்கோல் அடக்கமுடியாத நிலையில், ஜப்பான் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதேநேரம் ஜெர்மனி கோஸ்டாரிகாவை வீழ்த்தியிருந்தாலும் கோல் அடிப்படையில் ஜெர்மனி 3-ம் இடம் பிடித்து முதல் சுற்றோடு வெளியேறியது.

banner

Related Stories

Related Stories