விளையாட்டு

ரூ.1,839 கோடி தாரோம் எங்க நாட்டுக்கு வந்து ஆடுங்க - ரொனால்டோவுக்கு சவூதி அரேபிய கிளப் அதிரடி Offer !

ரொனால்டோவை 225 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,839 கோடி) ஒப்பந்தம் செய்ய சவுதி அரேபியாவைச் சேர்ந்த AL NASSR என்ற கிளப் விருப்பம் தெரிவித்துள்ளது.

ரூ.1,839 கோடி தாரோம் எங்க நாட்டுக்கு வந்து ஆடுங்க - ரொனால்டோவுக்கு சவூதி அரேபிய கிளப் அதிரடி Offer !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்கு ஆரம்பகட்டத்தில் ஆடினார். அதில் சிறப்பாக ஆடியதால் ஸ்பெயினின் நட்சத்திர கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அவரை ஒப்பந்தம் செய்தது.

பல ஆண்டுகள் அந்த கிளப்காக ஆடிய அவர் பல முக்கிய கோப்பைகளை அந்த அணிக்காக பெற்றுத்தந்துள்ளார். குறிப்பாக சாம்பியன்ஸ் லீக், லா லீகா போன்ற கோப்பைகளை ரியல் மாட்ரிட் வெல்ல முக்கிய காரணமாக ரொனால்டோ திகழ்ந்தார்.

ரூ.1,839 கோடி தாரோம் எங்க நாட்டுக்கு வந்து ஆடுங்க - ரொனால்டோவுக்கு சவூதி அரேபிய கிளப் அதிரடி Offer !

அதன்பின்னர் இத்தாலிய கால்பந்து கிளப்பான ஜுவென்ட்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. அங்கு இரண்டு ஆண்டுகள் ஆடிய அவர், பின்னர் மீண்டும் தனது தாய் கிளப்பான இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்கு மாறினார். ஆனால் முன்புபோல அவருக்கு அனைத்தும் சிறப்பாக இருக்கவில்லை.

அணி பயிற்சியாளர் மற்றும் உரிமையாளருடன் ரொனால்டோவுக்கு முரண்பாடு ஏற்பட்டது. இந்த தருணத்தில் முன்புபோல ரொனால்டோவால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததால் முக்கிய போட்டிகளில் ரொனால்டோ வெளியே உக்கார வைக்கப்பட்டார். அப்போது போட்டி முடியும் முன்னரே ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியேறியது சர்ச்சையை கிளப்பியது.

ரூ.1,839 கோடி தாரோம் எங்க நாட்டுக்கு வந்து ஆடுங்க - ரொனால்டோவுக்கு சவூதி அரேபிய கிளப் அதிரடி Offer !

அதனைத் தொடர்ந்து "அணிக்கு கிடைத்த புகழை வைத்து பணம் சம்பாதிப்பதே உரிமையாளர்களின் குறிக்கோளாக உள்ளது" என ரொனால்டோ தெரிவித்த கருத்து கால்பந்து உலகில் புயலை கிளப்பியது. அதன்பின்னர் எப்போது வேண்டுமானாலும் அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரொனால்டோவுடன் பரஸ்பரம் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்தது.

இதன் பின்னர் ரொனால்டோ அடுத்ததாக எந்த கால்பந்து கிளப்க்கு ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ரொனால்டோவை 225 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,839 கோடி) ஒப்பந்தம் செய்ய சவுதி அரேபியாவைச் சேர்ந்த AL NASSR என்ற கிளப் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 75 மில்லியன் டாலர் தொகை என்ற முறையில் மூன்றாண்டு ஒப்பந்தத்திற்கு 225 மில்லியன் டாலர் தருவதாக அந்த அணி நிர்வாகம் கூறியுள்ளது.

ரூ.1,839 கோடி தாரோம் எங்க நாட்டுக்கு வந்து ஆடுங்க - ரொனால்டோவுக்கு சவூதி அரேபிய கிளப் அதிரடி Offer !

பெரும்பாலும் நட்சத்திர வீரர்கள் ஐரோப்பாவில் டாப் கால்பந்து கிளப்களில்தான் விளையாட விரும்புவார்கள். தங்களின் prime டைம் முடிந்தபின்னர் தான் சீனா, அரேபியா போன்ற நாடுகளின் கால்பந்து கிளப்களில் இணைவார்கள். இதன் காரணமாக தற்போது AL NASSR கிளப்க்கு ரொனால்டோ ஆடுவாரா அல்லது ஐரோப்பாவின் மற்றொரு கால்பந்து கிளப்பில் இணைவாரா என்பது உலகக்கோப்பை கால்பந்து தொடர் முடிந்த பின்னரே தெரியவரும்.

banner

Related Stories

Related Stories