விளையாட்டு

T20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் பட்டியலில் 5-ம் இடம்பிடித்த சூரியகுமார்.. கோலியின் சாதனையை முந்துவாரா?

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் அதிக புள்ளிகள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இந்தியாவின் சூரியகுமார் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

T20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் பட்டியலில் 5-ம் இடம்பிடித்த சூரியகுமார்.. கோலியின் சாதனையை முந்துவாரா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி அந்த தொடரில் அதிகம் ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆடி வருகிறது.

T20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் பட்டியலில் 5-ம் இடம்பிடித்த சூரியகுமார்.. கோலியின் சாதனையை முந்துவாரா?

முதல் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. அதில் இந்தியா சார்பில் அபாரமான ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்து அசத்தினார். இவரின் அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஐசிசி சார்பில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சூரியகுமார் கடந்த முறை இருந்ததை விட 31 புள்ளிகள் அதிகம் பெற்று 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில், 836 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இடம்பெற்றுள்ளார்.

T20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் பட்டியலில் 5-ம் இடம்பிடித்த சூரியகுமார்.. கோலியின் சாதனையை முந்துவாரா?

அதுமட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டின் அதிக புள்ளிகள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 915 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 900 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், இந்திய வீரர் விராட் கோலி 897 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார். அடுத்து வரும் போட்டிகளிலும் இதே பார்மை தொடர்ந்து சூரியகுமார் பட்டியலில் முதல் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories