விளையாட்டு

#FIFAWorldcup - குறிவைத்து தாக்கிய எதிரணி.. காயமடைந்து வெளியேறிய நெய்மர்.. என்ன செய்யப்போகிறது பிரேசில் ?

உலகக்கோப்பை தொடரில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் காயமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#FIFAWorldcup - குறிவைத்து தாக்கிய எதிரணி.. காயமடைந்து வெளியேறிய நெய்மர்.. என்ன செய்யப்போகிறது பிரேசில் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகளான அட்ஜெண்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் தங்கள் முதல் போட்டிகளில் தோல்வியை சந்தித்தன.

இந்த நிலையில், நேற்று உலகக்கோப்பை கால்பந்து தொடரை அதிக முறை வென்ற அணியான பிரேசில் செர்பியா அணியை எதிர்கொண்டது. இந்த தொடரில் சிறிய அணிகள் கூட பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்போடு இந்த போட்டி தொடங்கியது.

#FIFAWorldcup - குறிவைத்து தாக்கிய எதிரணி.. காயமடைந்து வெளியேறிய நெய்மர்.. என்ன செய்யப்போகிறது பிரேசில் ?

இதன் முதல் பாதியில் பிரேசில் அணி தொடக்கத்தில் இருந்தே அபாரமான அட்டாக்கிங் கேமை தொடர்ந்தது. முன்களத்தில் பலம்வாய்ந்த வீரர்களை கொண்ட பிரேசில் தொடர்ந்து செர்பிய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அடிக்கடி கோலை நோக்கி பந்துகளை அடித்துக்கொண்டே இருந்தது. இதன் காரணமாக எப்போதும் வேண்டுமானாலும் கோல் விழலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செர்பிய கோல் கீப்பர் சாவிக் அபாரமாக செயல்பட்டு எதிரணியின் வாய்ப்பை முறியடித்தார்.

இரு அணிகளின் சார்பில் கோல் அடிக்கப்படாத நிலையில் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. இதில் ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் பந்தை கோல் நோக்கி அடிக்க அதை செர்பிய கோல் கீப்பர் சாவிக் தடுத்த நிலையில் ரீ பௌன்ஸ் ஆகிய பந்தை பிரேசில் வீரர் ரிச்சட்லிசன் அபாரமாக கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின்72-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் கொடுத்த அழகான பாஸை ரிச்சட்லிசன் தடுத்து அதை பைசைக்கிள் கிக் மூலம் அபாரமான கோல் ஒன்றை பதிவு செய்தார். உண்மையில் இந்த கோல் தொடரின் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டால் கூட அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அந்த அளவு அதிஅற்புதமான கோலாக அது அமைந்துள்ளது.

இந்த கோல் மூலம் 2-0 என்ற கணக்கில் பிரேசில் முன்னிலை பெற்றநிலையில் பதில் கோல் அடிக்க செர்பிய முயன்ற போதிலும் அதற்க்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் பெரும் சோகமாக பிரேசில் நட்சத்திரம் நெய்மர் காயமடைந்து வெளியேறியது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே செர்பிய அணி தடுப்பாளர்கள் நெய்மரை சுற்றிவளைத்தே செயல்பட்டனர். அவர் கால்களுக்கு பால் வந்தால் இரண்டு முதல் மூன்று தடுப்பாளர்கள் வரை அவரை சுற்றிவளைத்து அவருக்கு காயம் ஏற்படும் வகையில் ஆபத்தான ஆட்டத்தைத் தொடந்தனர்.

செர்பியா அணி செய்த 12 ஃபவுல்களில் 9 ஃபவுல்கள் நெய்மருக்கு எதிராக வந்ததே. அந்த அளவு அவரிடம் செர்பிய வீரர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். அதிலும் நெய்மரின் காலை குறிவைத்து நடத்தப்பட்ட தடுப்பில் நெய்மர் நடக்கமுடியாமல் சிரமப்பட்ட நிலையில், அவர் வெளியேறினார். எதிர்வரும் போட்டிகளில் நெய்மர் ஆடுவார் என பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட் கூறிய நிலையில், அவரின் காயம் குறித்து 48 மணி நேரத்துக்கு பின்னர் தான் தெரியவரும் என பிரேசில் அணியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

#FIFAWorldcup - குறிவைத்து தாக்கிய எதிரணி.. காயமடைந்து வெளியேறிய நெய்மர்.. என்ன செய்யப்போகிறது பிரேசில் ?

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கொலம்பியாவிற்கு எதிரான போட்டியில் நெய்மருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த தொடரில் இருந்தே வெளியேறினார். அந்த தொடரில் நெய்மர் இருக்கும் வரை சிறப்பாக ஆடிய பிரேசில் அணி அதன் பின்னர் தடுமாறியது. அதிலும் அரையிறுதியில் சொந்த மண்ணில் ஜெர்மனி அணிக்கு எதிராக 7-1 என்ற கணக்கில் மோசமாக தோற்றது.இதன் காரணமாக நெய்மரின் காயம் இந்த தொடரில் பிரேசில் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆனால், 2014-ம் ஆண்டு உலகக்கோப்பையில் பிரேசில் அணி நெய்மர் என்ற ஒற்றை முன்கள வீரரை நம்பி களமிறங்கியது. ஆனால் இந்த தொடர் அப்படி அல்ல. நெய்மாருக்கு இணையான முன்கள வீரர்கள் அந்த அணியில் நிறைந்துள்ளனர். இங்கிலாந்தின் டோட்டன்ஹம் கிளப்க்கு ஆடும் ரிச்சர்லிசன், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கிளப்பிக்கு ஆடும் ஆன்டோணி, அர்சனல் அணிக்கு ஆடும் கேப்ரியல் ஜீசஸ், ஸ்பெயினின் புகழ்பெற்ற பார்சிலோனா கிளப்பிக்கு ஆடும் ரபின்ஹா, ரியல் மாட்ரிட் கிளப்க்கு ஆடும் வினீசியஸ், ரோட்ரிகோ ஆகியோர் இருப்பதால் நெய்மர் இல்லை என்றாலும் அது பாதிப்பை ஏற்படுத்தாது என உறுதியாக கூறலாம்.

banner

Related Stories

Related Stories