விளையாட்டு

ரோஹித் சர்மா OUT.. ஹர்திக் பாண்டியா IN.. பி.சி.சி.ஐ-யின் அதிரடி முடிவுக்கான காரணம் என்ன?

இந்திய டி20 அணிக்கு முழுநேர கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமனம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மா OUT.. ஹர்திக் பாண்டியா IN.. பி.சி.சி.ஐ-யின் அதிரடி முடிவுக்கான காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை டி20 போட்டிகளில் மட்டும் மீண்டும் களமிறக்கலாமா என BCCI ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மா OUT.. ஹர்திக் பாண்டியா IN.. பி.சி.சி.ஐ-யின் அதிரடி முடிவுக்கான காரணம் என்ன?

இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் வெள்ளை பந்து விளையாட்டில் இந்திய அணி மிகவும் குறைவான செயல்பாட்டைக் கொண்ட அணி என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார். இப்படி பலரும் இந்திய அணி வீரர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவைக் கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி காட்டியுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவில், சுனில் ஜோஷி (தெற்கு மண்டலம்), ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்) மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி (கிழக்கு மண்டலம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ரோஹித் சர்மா OUT.. ஹர்திக் பாண்டியா IN.. பி.சி.சி.ஐ-யின் அதிரடி முடிவுக்கான காரணம் என்ன?

இவர்கள் அனைவரும் தற்போது நீக்கப்பட்டுத் தேர்வு குழுவுக்கு புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 28 ஆம் தேதி மாலை 6 மணி வரை காலக்கெடு என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்திய அணி நியூசிலாந்து தொடர் விளையாடி வருகிறது. நேற்று நடக்க இருந்த முதல் டி20 போட்டி மழைகாரணமாக ரத்து செய்யப்பட்டது. நியூலாந்து தொடரில் டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார். அதேபோல் ஒரு நாள் போட்டிக்கு தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா OUT.. ஹர்திக் பாண்டியா IN.. பி.சி.சி.ஐ-யின் அதிரடி முடிவுக்கான காரணம் என்ன?
Ricardo Mazalan

இந்த தொடரில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று விதமான போட்டிக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவதால் அவருக்குச் சுமை அதிகமாக இருக்கிறது? மூன்று விதமான போட்டிக்கும் 3 கேப்டன்கள் இருந்தால் அவர்களுக்கு எளிதாக இருக்கும் என மூத்த வீரர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் டி20 தொடருக்கு மட்டும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை முழு நேரகேப்டனாக நியமிக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories