விளையாட்டு

"தினேஷ் கார்த்திக் சிறந்த வீரர்..ஆனால்" - அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு ? -மனம் திறந்த ரவி சாஸ்திரி !

இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஒரு இடது கை ஆட்டக்காரர் தேவை என்று நான் நினைக்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

"தினேஷ் கார்த்திக் சிறந்த வீரர்..ஆனால்" - அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு ? -மனம் திறந்த ரவி சாஸ்திரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

"தினேஷ் கார்த்திக் சிறந்த வீரர்..ஆனால்" - அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு ? -மனம் திறந்த ரவி சாஸ்திரி !

அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டார். மேலும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.

தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகக்கோப்பையில் ஆடும் லெவனில் இடம்பெற்ற அவர் அடுத்தடுத்த போட்டியில் பெரிதாக சோபிக்கத் தவறினார். இதனால் மீண்டும் அவருக்கு பதில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி ஜிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கு பதில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த போட்டியில் ரிஷப் பண்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

"தினேஷ் கார்த்திக் சிறந்த வீரர்..ஆனால்" - அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு ? -மனம் திறந்த ரவி சாஸ்திரி !

அதைத் தொடர்ந்து அரையிறுதியில் ஆடும் வீரர் ரிஷப் பண்ட்டா தினேஷ் கார்த்திக்கா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரிஷப் பண்ட்தான் அரையிறுதியில் ஆடவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "தினேஷ் கார்த்திக் அணிக்கான ஒரு அழகான வீரர். ஆனால் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஒரு இடது கை ஆட்டக்காரர் தேவை என்று நான் நினைக்கிறேன். ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஒரு நாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். நான் அரை இறுதிப் போட்டிக்கு ரிஷப் பண்ட்டைதான் அணியில் சேர்ப்பேன்.அவருக்கு ஆஸ்திரேலியாவில் ஆடிய அனுபவம் இருக்கிறது. அணியில் நிச்சயம் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கட்டாயம் தேவை. மூன்று அல்லது நான்கு பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்து இருந்த போதும், ஒரு இடது கை பேட்ஸ்மேன் அபாயகரமானவராக இருந்து, உங்களை அந்த ஆட்டத்தில் மீட்டுக் கொண்டு வர முடியும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories