விளையாட்டு

"இந்திய அணியின் ஒரே குறை இவர்தான்" - விமர்சித்த கம்பீருக்கு அடுத்த போட்டியிலேயே பதிலடி கொடுத்த அஸ்வின் !

அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சகாலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

"இந்திய அணியின் ஒரே குறை இவர்தான்" - விமர்சித்த கம்பீருக்கு அடுத்த போட்டியிலேயே பதிலடி கொடுத்த அஸ்வின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து, பாகிஸ்தான் -நியூஸிலாந்து மோதவுள்ளன. இந்திய அணி இந்த தொடரில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளை வீழ்த்திய நிலையில், தென்னாபிரிக்க அணியிடம் மட்டும் தோல்வியைத் தழுவியது.

"இந்திய அணியின் ஒரே குறை இவர்தான்" - விமர்சித்த கம்பீருக்கு அடுத்த போட்டியிலேயே பதிலடி கொடுத்த அஸ்வின் !

இந்த உலகக்கோப்பையில் பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், மற்றும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் ஆடும் லெவனில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர்களுக்கு தற்போது அந்த வாய்ப்பை இந்திய அணி வழங்கி வருகிறது. அதிலும், சஹாலுக்கு பதில் அஸ்வினை இந்திய அணி விளையாட வைப்பது பலரின் விமர்சனத்தை பெற்று வருகிறது.

அந்த வரிசையில் சஹாலுக்கு பதில் அஸ்வினைதேர்வு செய்த இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் "இந்திய அணி ஒரு வ்ரிஸ்ட் ஸ்பின்னருடன் களமிறங்க வேண்டும். ஆனால் இந்திய அணியோ தொடர்ந்து அஸ்வினுக்கு மட்டுமே வாய்ப்பளித்து வருகிறது. இந்திய அணியில் தற்போது இருக்கும் ஒரே குறை அதுதான்.

"இந்திய அணியின் ஒரே குறை இவர்தான்" - விமர்சித்த கம்பீருக்கு அடுத்த போட்டியிலேயே பதிலடி கொடுத்த அஸ்வின் !

அஸ்வினால் பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு ஓரளவிற்கு பங்களிப்பு கொடுக்க முடியும் என்று அவரை அணியில் எடுக்கிறார்கள். ஆனால் அனைத்து போட்டிகளிலும் அஸ்வினின் பேட்டிங்கை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டுகளை இழக்கும் சில போட்டிகளில் மட்டுமே அஸ்வினுடைய பங்களிப்பு தேவைப்படும். எனவே, அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சகாலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்"என்று கூறியுள்ளார்.

ஆனால், இவர் இப்படி கருத்து கூறியதற்கு பின்னர் நடைபெற்ற இந்தியா ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories