விளையாட்டு

ஒரே போட்டியில் சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி - தெறிக்க விடும் கோலியின் சராசரி !

பாகிஸ்தானுடனான போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் ஐசிசி தொடர்களில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

ஒரே போட்டியில் சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி - தெறிக்க விடும் கோலியின் சராசரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரே போட்டியில் சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி - தெறிக்க விடும் கோலியின் சராசரி !

இதில் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 54 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்த நிலையில், அடுத்ததடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா மற்றும் விராட் கோலி இருவரும் நிதானமாக தொடங்கி இறுதியில் பந்துகளை சிக்சருக்கு விளாசினார். இறுதி ஓவரில் 16 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், விராட் கோலியோடு இணைந்து நின்று உறுதியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் ஆட்டத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக்கும் அதே ஓவரில் ஆட்டம் இழந்தார். முன்னதாக பதற்றத்தில் பாகிஸ்தான் அணி நோ பால் வீசியது. இதில் ஃப்ரீஹிட் கிடைத்த நிலையில், ஸ்டம்ப்பில் பந்து பட்ட நிலையிலும் இந்தியா அந்த பந்தில் 3 ரன்கள் எடுத்தது.கடைசி பந்தில் இந்தியா 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசியாக அஸ்வின் களமிறங்கினார். அப்போது பந்துவீசிய நவாஸ் வைடாக வீச ஒரு ரன் கிடைத்தது. பின்னர் இறுதி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில், அஸ்வின் பந்தை அழகாக மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு, அந்த ஒரு ரன் எடுத்தார்.

ஒரே போட்டியில் சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி - தெறிக்க விடும் கோலியின் சராசரி !

இந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பி விராட் கோலியால் இந்திய அணி வெற்றி வாகையை சூடியது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த போட்டியின் மூலம் சச்சினின் சாதனையையும் முறியடித்துள்ளார். ஐசிசி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் இதுவரை 3 முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய நிலையில் தற்போது கோலி 4 முறை வென்று சச்சினின் இந்த சாதனையை முறியடித்துள்ளார். இதே போன்று ஐசிசி தொடர்களில் அதிக முறை அரைசதம் விளாசியவர்கள் பட்டியலில் சச்சின் 23 முறை அடித்திருந்த நிலையில் கோலி 24 முறை விளாசி முதலிடம் பிடித்துள்ளார்.

அதே நேரம் டி20 உலககோப்பையில் வழக்கமாக சிறப்பாக ஆடும் விராட் கோலி தனது சராசரியை 84 ஆக உயர்த்தியுள்ளார். எப்போதுமே சேஸிங் கிங்காக இருக்கும் கோலி டி20 உலககோப்பையில் சேஸிங் செய்யும் போது சராசரியை 270 ஆக வைத்துள்ளார். அதுவே வெற்றிக்கரமான சேஸிங்கில் கோலியின் சராசரி 518 யாக பிரமிக்கும் வகையில் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories