விளையாட்டு

பிடிக்காத அணிக்கு நாட்டின் பெயரை வைக்கும் உரிமையை கொடுத்தது யார் ? விளையாட்டால் வரும் ஆபத்து என்ன?

இசை கேட்டு அழுவதற்கும் கிரிக்கெட்டில் தான் விரும்பிய அணி தோற்ற பிறகு அழுவதற்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது.

பிடிக்காத அணிக்கு நாட்டின் பெயரை வைக்கும் உரிமையை கொடுத்தது யார் ? விளையாட்டால் வரும் ஆபத்து என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விளையாட்டு தவறா? விளையாடவே கூடாதா? விளையாடலாம்.

பழங்குடி காலத்திலிருந்தே மனிதன் விளையாடிதான் வந்திருக்கிறான். ஏனென்றால் உளவியல் ரீதியாகவே மனிதனின் வன்மமும் புணர்வு வெறியும் ஏதோ வகையில் வெளியேற்றப்பட வேண்டும். இல்லையெனில் சமூகத்தில் பெரும் சிக்கல்கள் நேரிடும். ஆகவேதான் வன்மமும் வெறியும் unleash செய்து கொள்வதற்கு மதம், வீரம், வெற்றி, தேசியம், விளையாட்டு என பல வகைகள் தேவைப்படுகிறது.

விளையாடுதல் என்பது பிரச்சினையே இல்லை. ஆனால் அது நிறுவனமயமாக்கப்படுகையில் அதிகாரம் தனக்கு தேவையான விஷயங்களை அதில் ஏற்றி வைக்கும். அது எப்போதும் ஆபத்தை நோக்கியதாகத்தான் இருக்கும். மக்களுக்கு எதிரானதாகத்தான் இருக்கும்.

பிடிக்காத அணிக்கு நாட்டின் பெயரை வைக்கும் உரிமையை கொடுத்தது யார் ? விளையாட்டால் வரும் ஆபத்து என்ன?

பெரும்பாலும் கிராமத்து இளைஞர்கள் விளையாடும் கிரிக்கெட் அணிகளுக்கு எல்லாம் பெயர்கள் 'பவுண்டரி பாய்ஸ்', 'அடிச்சா சிக்ஸு போட்டா போல்டு' என்ற ரீதியில்தான் இருக்கும். அப்படியே வட்டம் பெரிதாகும்போது பாருங்கள். அதிகாரத்துடனான நெருக்கம் அதிகரிக்க தொடங்கும்போது அணிகளின் பெயர்களை கவனியுங்கள். மாவட்ட பெயர்கள், மாநில பெயர்கள், பின் மொத்தமாக நாட்டின் பெயர். உங்கள் ஊர், மாநிலம், நாடு என எல்லா வன்மவெறிக் கூறுகளையும் ஏற்றி ஏற்றி உங்களுக்கு மஞ்சள் பூசி தண்ணீர் தெளிக்கப்படுகிறது. அதற்கு நாம் தலையாட்ட வேண்டியது மட்டும்தான் பாக்கி!

சிலருக்கு இந்திய கிரிக்கெட் அணி பிடிக்காது. சிலருக்கு திராவிட் பிடிக்கும். திராவிட் மவுனராகம் படத்தில் வரும் மோகன் போன்றவர். மோகனைவிட கார்த்திக்குகளையே எல்லாருக்கும் பிடிக்கும். ஆஸ்திரேலிய அணி பலருக்கு பிடிக்கும். அதிலும் Steve Waugh-க்கு பிறகு பெரிய அந்த அணி மேல் பலருக்கு பிடித்தம் இல்லை.

பிடிக்காத அணிக்கு நாட்டின் பெயரை வைக்கும் உரிமையை கொடுத்தது யார் ? விளையாட்டால் வரும் ஆபத்து என்ன?

சிலருக்கு பிடிக்காத ஓர் அணி அவர் இருக்கும் நாட்டின் பெயரை ஏந்தி இருக்கும். அந்த அணிக்கு அந்த நாட்டின் பெயரை எடுத்துக்கொள்ளும் அனுமதியை யார் அளித்தது? மக்கள் வழங்கவில்லை. அப்படியெனில் இங்கு மக்கள் என்பவர் யார்? இத்தனைக்கும் அது தேசிய விளையாட்டு கூட அல்ல அப்படியெனில் யார் இங்கு அதிகாரம் மிக்கவர்கள்?

கிரிக்கேட் தொடங்கி எல்லா விளையாட்டுகளையும் பார்த்து ரசிப்பவர், அவர் விரும்பும் அணியை அவரின் நீட்சியாகவே பார்க்க முடியும். அந்த அணிதான் அவருக்கு வன்மம். அந்த அணிதான் அவருக்கு புணர்வு வெறி. அவர் அகங்காரத்தின் பிரதியாக அந்த அணியை பார்க்கிறார். அவர் தாய் இறந்து கிடக்கும்போதும் அவரின் அகங்காரத்தை சீண்டி பாருங்கள். அவருக்கு அந்த சீண்டல்தான் பிரச்சினையாக தெரியும்.

இசை கேட்டு அழுவதற்கும் கிரிக்கெட்டில் தான் விரும்பிய அணி தோற்ற பிறகு அழுவதற்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது. அதை உங்களால் புரிந்துகொள்ள முடியுமெனில் இங்கு சொல்வதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

banner

Related Stories

Related Stories