விளையாட்டு

லோக்கல் அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்த இந்திய அணி.. உலகக்கோப்பை கனவு அவ்வளவுதானா ?

உள்ளூர் அணியான மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி அதிர்ச்சியளித்தது.

லோக்கல் அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்த இந்திய அணி.. உலகக்கோப்பை கனவு அவ்வளவுதானா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் தேதி பலரால் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை டி20 தொடர் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் இலங்கை நமீபியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி சந்திக்கிறது.

இந்திய அணியில் ஜடேஜா,பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தால் ஆடாத நிலையில், இந்தியா இந்த தொடரை எப்படி அணுகப்போகிறது என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்னும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு பயிற்சிக்காக மேற்கு ஆஸ்திரேலியா என்ற மாகாண அணியுடன் மோதியது.

லோக்கல் அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்த இந்திய அணி.. உலகக்கோப்பை கனவு அவ்வளவுதானா ?

இதன் முதல் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் விராட் கோலி,சூர்யகுமார் யாதவ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் ராகுல் இந்திய அணியை வழிநடத்தினார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் ஆடிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பந்த், ஹூடா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். நன்றாக ஆடிய ராகுலும் 55 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியை தழுவி அதிர்ச்சியளித்தது.

லோக்கல் அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்த இந்திய அணி.. உலகக்கோப்பை கனவு அவ்வளவுதானா ?

இந்திய அணி அடுத்ததாக வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சி போட்டியில் பங்கேற்கவுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்தியா உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியும்.

மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வலிமையோடு காட்சியளித்த இந்திய பேட்டிங் மிகவும் மோசமாக செயல்பட்டுள்ளது. இதை சரி செய்தால் மட்டுமே இந்திய அணியால் உலகக்கோப்பையை நினைத்து பார்க்க முடியும். இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories