விளையாட்டு

உடைக்கவே முடியாத ஆஸ்திரேலிய அணியின் சாதனையை உடைக்கபோகும் இந்திய அணி..வெளிவந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!

ஒரு ஆண்டில் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்திய அணி சமன்செய்துள்ளது.

உடைக்கவே முடியாத ஆஸ்திரேலிய அணியின் சாதனையை உடைக்கபோகும் இந்திய அணி..வெளிவந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட, 250 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்தது இந்திய அணி. அணியின் டாப் ஆர்டர் வேகமாக சரிந்த நிலையில் சஞ்சு சாம்சன் (86 நாட் அவுட்), ஷ்ரேயாஸ் ஐயர் (50) ஆகியோர் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அவர்களால் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 30 ரன்கள் தேவை என்றிருந்தபோது, தப்ராய்ஸ் ஷம்ஸி வீசிய அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உடைக்கவே முடியாத ஆஸ்திரேலிய அணியின் சாதனையை உடைக்கபோகும் இந்திய அணி..வெளிவந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!

அதைத் தொடர்ந்து ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 278 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில், இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 113 ரன்களை விளாசி அசத்தினர்.

அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்த ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான போட்டியிலும் சேர்ந்து இந்திய அணியின் 38-வது வெற்றியாக அமைந்தது.

உடைக்கவே முடியாத ஆஸ்திரேலிய அணியின் சாதனையை உடைக்கபோகும் இந்திய அணி..வெளிவந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!

இந்த நிலையில், இதன்மூலம் 19 ஆண்டுகால ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று அசுரபலத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி அந்த அதில் மட்டும் மொத்தம் 38 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஒரு ஆண்டில் ஒரு அணி வெற்றி அதிக வெற்றிகள் அதுவே. இந்த சாதனையை இந்திய அணி தற்போது சமன் செய்துள்ளது.

20 ஓவர் உலகக்கோப்பை சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அதில் ஒரு வெற்றியை பெற்றாலே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் உடைக்கமுடியாத சாதனையை உடைக்கும் என்பதால் உலகக்கோப்பை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories