விளையாட்டு

"நாங்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல்,,உலகக் கோப்பை எங்களுக்குத்தான்" -இங்கிலாந்து தற்காலிக கேப்டன் ஆருடம் !

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பை வெல்வதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என இங்கிலாந்து வீரர் மொயின் அலி கூறியுள்ளார்.

"நாங்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல்,,உலகக் கோப்பை எங்களுக்குத்தான்" -இங்கிலாந்து தற்காலிக கேப்டன் ஆருடம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்று 7 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 6 போட்டிகளில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருக்க, இறுதி போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை மிக எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

"நாங்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல்,,உலகக் கோப்பை எங்களுக்குத்தான்" -இங்கிலாந்து தற்காலிக கேப்டன் ஆருடம் !

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. சால்ட், பென் டக்கெட் ஆகிய வீரர்கள் இந்த தொடரில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியுள்ளனர். உலககோப்பை தொடர் நெருங்கிக் கொண்டு வருவதால் இந்த தொடரில் எந்த அணி பலமான அணியாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் மொயீன் அலி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பை வெல்வதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இந்த தொடரில் நெருக்கடி மிகவும் அதிகமாக இருக்கும், தற்பொழுது நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம் .

"நாங்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல்,,உலகக் கோப்பை எங்களுக்குத்தான்" -இங்கிலாந்து தற்காலிக கேப்டன் ஆருடம் !

இந்த உலக கோப்பை தொடரில் எதிரணிக்கு நிச்சயம் நாங்கள் அச்சுறுதலாக இருப்போம். எங்களுக்கு எதிராக விளையாடுவதற்கு மற்ற அணிகள் நிச்சயம் பயப்படுவார்கள்.பெர்த்தில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மைதானம் எப்படி செயல்படும் என்பதை நிச்சயம் தெரிந்து கொள்வோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories