விளையாட்டு

ஆஸ்திரேலியாவை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடர்.. விராட் கோலியின் அதிரடி ஆட்டம் தொடருமா?

ரோஹித்தை விட கோலி 34 ரன்கள் அதிகம் எடுத்தால், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமை பெறுவார் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடர்.. விராட் கோலியின் அதிரடி ஆட்டம் தொடருமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அடுத்த மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இப்போது தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. அந்த அணிக்கு எதிராக 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுகிறது இந்தியா. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.

முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த தொடரின் அதிமுக்கியமான கடைசிப் போட்டியில் அரைசதம் அடித்து இந்தியா வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்தார்.

ஆஸ்திரேலியாவை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடர்.. விராட் கோலியின் அதிரடி ஆட்டம் தொடருமா?

கடந்த சில வாரங்களாக நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்தத் தொடரில் மிகப்பெரிய அங்கம் வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா முதல் இடத்தில் இருக்கிறார். அந்த அணிக்கு எதிராக 13 போட்டிகளில் 362 ரன்கள் எடுத்திருக்கிறார்.

முன்னாள் இந்திய பேட்ஸ்மேனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவானுமான சுரேஷ் ரெய்னா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 339 ரன்கள் எடுத்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் இவர் தான். இந்தப் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 10 போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 254 ரன்கள் எடுத்திருக்கிறார். ரோஹித் ஷர்மாவை விட 108 ரன்கள் பின்தங்கியிருக்கிறார் கோலி.

ஆஸ்திரேலியாவை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடர்.. விராட் கோலியின் அதிரடி ஆட்டம் தொடருமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக அரை சதங்கள்

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய அணிக்காக மொத்தம் 33 சர்வதேச டி20 அரைசதங்கள் அடித்திருக்கிறார் அவர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 முறை 50 ரன்களைக் கடந்திருக்கிறார். இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி ஒரு அரைசதம் அடித்தால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுவார் விராட்.

சர்வதேச டி20 அரங்கில் டாப் ரன் ஸ்கோரர்

ரன் மெஷினாக விளங்கி வரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இவர் தான். 33 வயதான விராட் அனைத்து விதமான டி20 போட்டிகளிலும் சேர்த்து 10,978 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் 22 ரன்கள் எடுத்தால் டி20 அரங்கில் 11,000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமை பெருவார் அவர். இந்தத் தொடரில் ரோஹித்தை விட கோலி 34 ரன்கள் அதிகம் எடுத்தால், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமை பெறுவார் விராட் கோலி.

banner

Related Stories

Related Stories