விளையாட்டு

"இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றால் இவரை அணியில் எடுக்கவேண்டும்"- இந்திய அணி முன்னாள் வீரர் கருத்து !

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் நிச்சயம் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என இந்தியா அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

"இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றால் இவரை அணியில் எடுக்கவேண்டும்"- இந்திய அணி முன்னாள் வீரர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் சர்வதேச டி20 போட்டி மொஹாலியில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இல்லாமல் தான் களமிறங்கியது இந்திய அணி. கடந்த சில மாதங்களாகவே பிளேயிங் லெவனில் அவருடைய இடம் பற்றி பல விவாதங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் கேப்டன் ரோஹித் ஷர்மா தினேஷ் கார்த்திக்கையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

ஆனால் அந்த முடிவு முதல் போட்டியில் நல்ல முடிவுகளைக் கொடுக்கவில்லை. 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடைசி நான்கு இன்னிங்ஸ்களாக சுமாராகவே ஆடி வரும் தினேஷ் கார்த்திக் 7, 6, 12, 1* என்ற ஸ்கோர்களையே எடுத்திருக்கிறார்.

"இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றால் இவரை அணியில் எடுக்கவேண்டும்"- இந்திய அணி முன்னாள் வீரர் கருத்து !

இந்தியாவின் விக்கெட் கீப்பர் பொசிஷனுக்கு தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆசிய கோப்பை தொடரின்போது இந்திய அணி இருவரையும் மாறி மாறி பயன்படுத்தியது. அதனால், இருவருக்குமே போதுமான போட்டிகள் கிடைக்கவில்லை. அவர்கள் இருவருமே டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்திய அணி தினேஷ் கார்த்திக்கு சற்று அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவே தெரிகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் நிச்சயம் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள அவர், "போட்டியை வெற்றி பெற்றுக் கொடுக்கும் திறமை படைத்த ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்தால், எந்த விலை கொடுத்தாவது அவரை அணியின் விளையாட வைக்க வேண்டும், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் நிச்சயம் ரிஷப் பண்ட் இன்றிலிருந்து ஆடும் லெவனில் விளையாட வேண்டும் " என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories