விளையாட்டு

"உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் பாசிட்டிவ் மனதில் செல்கிறது".. - எச்சரிக்கை விடுத்த பார்த்திவ் படேல் !

இந்திய அணியை வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கையோடு பாகிஸ்தான் அணியினர் களமிறங்குவார்கள் என முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் பாசிட்டிவ் மனதில் செல்கிறது".. - எச்சரிக்கை விடுத்த பார்த்திவ் படேல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்கப்போகிறது. ஆசிய கோப்பையின் தொடக்கம் போலவே, இந்தத் தொடரிலும் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23ம் தேதி எதிர்கொள்கிறது. கடந்த ஒரு ஆண்டில் இந்த அணிகள் மோதிய 3 டி20 போட்டிகளுமே துபாயில் தான் நடந்தன. இந்நிலையில், இந்த இரு அணிகளும் மோதும் உலகக் கோப்பை போட்டி பிரசித்தி பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெறுகிறது. அதனால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இந்தப் போட்டிக்குத் திரளும்.

கடந்த டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தானைத் தான் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது பாகிஸ்தான். அதனால் சூப்பர் 12 சுற்றுடனேயே அந்தத் தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி. அனைத்து வகையான ஃபார்மட்களிலும் இந்திய அணி பாகிஸ்தானிடம் உலகக் கோப்பையில் தோல்வி அடைந்தது அது தான் முதல் முறை.

"உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் பாசிட்டிவ் மனதில் செல்கிறது".. - எச்சரிக்கை விடுத்த பார்த்திவ் படேல் !

இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு முறை பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் நடந்த குரூப் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, மிக முக்கியமான சூப்பர் 4 போட்டியில் தோல்வி அடைந்தது. இதுபற்றிப் பேசிய இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், சமீபத்திய முடிவுகள் பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை தரும் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக 2021 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலைக் கொடுக்கும் என்றும் கூறியிருக்கிறார் அவர்.

"ஒரு தொடரை மிகவும் சிறப்பான முறையில் தொடங்குவது மிகவும் முக்கியம். இவை மிகப் பெரிய தொடர்கள் கிடையாது. 50 ஓவர் உலகக் கோப்பையின்போது உங்களுக்கு ஒரு தோல்வியில் இருந்து மீண்டு வர நேரம் கிடைக்கும். ஆனால் டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் தோற்றுவிட்டால், நீங்கள் உங்கள் அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்கிவிடுவீர்கள். அதன்பிறகு பல சந்தேகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கும். இந்தத் தொடரில் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பு அப்படியே குறைந்து விடும். ஐபிஎல் தொடரில் அணிகள் கம்பேக் கொடுப்பது பற்றி நாம் பேசுகிறோம். ஏனெனில் அங்கு ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 14 போட்டிகளில் விளையாடும். இங்கு நாம் குறைந்தபட்சம் தென்னாப்பிரிக்கா அல்லது பாகிஸ்தான் ஏதாவதொரு அணியையாவது வீழ்த்த வேண்டும்.

"உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் பாசிட்டிவ் மனதில் செல்கிறது".. - எச்சரிக்கை விடுத்த பார்த்திவ் படேல் !
Raj

பாகிஸ்தான் அணிக்கும் அதே தான். ஆனால் அவர்கள் வேறு விதமான மனநிலையோடு இந்த தொடரை அணுகுவார்கள். கடந்த உலகக் கோப்பையில் அவர்கள் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்துவார்கள் என்று எதிர்பார்த்து வரவில்லை. ஆனால் இப்போது கடைசி 3 போட்டிகளில் இருமுறை இந்தியாவை வீழ்த்தியிருப்பதால், அவர்களின் மனநிலை வேறு மாதிரி இருக்கும். இந்த இந்திய அணியை வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கையோடு அவர்கள் களமிறங்குவார்கள். அதற்கு முன்பு அவர்கள் இந்திய அணியை உலகக் கோப்பையில் வீழ்த்தியதே இல்லை. அதனால் இந்தப் போட்டி இந்திய அணிக்கு வேறு விதமான சவாலை கொடுக்கும்" என்று கூறியிருக்கிறார் பார்த்திவ் படேல்.

banner

Related Stories

Related Stories