விளையாட்டு

"ரோகித்-கோலி செய்தது எல்லாம் தேவையில்லாதது..அவசர புத்தியை விடுங்கள்" - சுனில் கவாஸ்கர் விமர்சனம் !

கோலி - ரோகித் தங்களுக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை 60 - 70 ரன்களுக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆனால் மோசமான ஷாட்களால் ஆட்டமிழந்தனர் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

"ரோகித்-கோலி செய்தது எல்லாம் தேவையில்லாதது..அவசர புத்தியை விடுங்கள்"  - சுனில் கவாஸ்கர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

துபாயில் நேற்று நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரோகித் சர்மா நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது.

"ரோகித்-கோலி செய்தது எல்லாம் தேவையில்லாதது..அவசர புத்தியை விடுங்கள்"  - சுனில் கவாஸ்கர் விமர்சனம் !

ஆனால் சிறிய தவறால் ரோகித், விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்னர் இறுதியில் ஜடேஜா,பாண்டியா அதிரடி ஆட்டம் காரணமாக 2 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில் அணியின் மூத்த வீரர்கள் ரோகித் மற்றும் கோலியின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அவர்கள் நன்கு ரன் குவித்து வந்தனர். இருவரும் நீண்ட நேரம் நின்று விளையாட வாய்ப்பிருந்தது. இதனால் கோலி நல்ல ஷாட்கள் நிறைய ஆடினார்.கோலி - ரோகித் தங்களுக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை 60 - 70 ரன்களுக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆனால் மோசமான ஷாட்களால் ஆட்டமிழந்தனர்.

"ரோகித்-கோலி செய்தது எல்லாம் தேவையில்லாதது..அவசர புத்தியை விடுங்கள்"  - சுனில் கவாஸ்கர் விமர்சனம் !

ரன் ரேட் 19 - 20 என தேவைப்பட்டிருந்தால் சிக்ஸர் அடிக்கலாம். ஆனால் குறைந்த ரன்ரேட்டில் இப்படி செய்திருக்க கூடாது. அது போன்ற சூழலில் பெரிய ஷாட்கள் தேவையே கிடையாது. ஒருவேளை 70 - 80 ரன்களை அவர்கள் அடித்திருந்தால் சிக்ஸருக்கு சென்றிருக்கலாம். இனி வரும் போட்டிகளில் இதனை கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories