விளையாட்டு

"அவரின் இந்த பிரச்சனை சரியாகி விட்டது, இனி பழைய விராட் கோலியை பார்ப்பீர்கள் " - ரவி சாஸ்திரி கணிப்பு !

விராட் கோலி அரைசதம் அடித்துவிட்டால் விமர்சனம் செய்யும் அனைத்து வாய்களும் இந்தத் தொடர் முடியும் வரை மூடிவிடும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

"அவரின் இந்த பிரச்சனை சரியாகி விட்டது, இனி பழைய விராட் கோலியை பார்ப்பீர்கள் " - ரவி சாஸ்திரி கணிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விராட் கோலி, ஒருகட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் இப்போது தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார். சர்வதேச அரங்கில் அவர் சதமடித்து 1000 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் அடுத்த நடக்கவிருக்கும் 2022 ஆசிய கோப்பை தொடரில் அனைவரின் எதிர்பார்ப்பும் அவர் மீது இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப் பயணங்களில் இடம்பெறாத கோலி இந்த ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வந்து இந்திய அணிக்கு சிறப்பான செயல்பாட்டைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது.

விராட் கோலிக்கு போட்டிகளில் இருந்து சில காலம் ஓய்வு தேவை என்று முதலில் சொல்லியது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான். விராட் கோலியும் கடந்த சில வாரங்களாக ஓய்வில் தான் இருக்கிறார். தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அவர், ஒரு மிகப்பெரிய மைல்கல்லை நெருங்கிக்கொண்டிருக்கிறார். சர்வதேச டி20 அரங்கில் தன்னுடைய 100வது போட்டியை விளையாடப் போகிறார் கோலி. இந்நிலையில், அவர் மீண்டும் சர்வதேச அரங்கில் களமிறங்கும்போது, மிகவும் அமைதியான அதீத நம்பிக்கையுடன், எந்தவித குழப்பமும் இல்லாத ஒரு கோலியை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கூறியிருக்கிறார் ரவி சாஸ்திரி.

"அவரின் இந்த பிரச்சனை சரியாகி விட்டது, இனி பழைய விராட் கோலியை பார்ப்பீர்கள் " - ரவி சாஸ்திரி கணிப்பு !

"நான் அவரிடம் இன்னும் பேசவில்லை. ஆனால் இதுவொன்றும் விஞ்ஞானமோ அறிவியலோ அல்ல. மிகப் பெரிய வீரர்கள் சரியான தருணத்தில் மீண்டு வருவார்கள். அவர்களுக்கு ஒரு சிறு ஓய்வு தேவைப்படும். மனச் சோர்வு எப்பேர்ப்பட்ட வீரரையும் ஆட்டிப் படைத்து விடும். உலகில் இதுபோன்ற ஒரு காலகட்டத்தை சந்திக்காத வீரர்களே இல்லை. எல்லோரும் ஒருகட்டத்தில் மிகமோசமான ஃபார்மில் இருந்திருக்கிறார்கள். இந்த ஓய்வு காலம் கோலியின் உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் என்று தான் நினைக்கிறேன். என்ன விஷயங்கள் எப்படி இருந்திருக்கலாம் என்று அவரும் நிச்சயம் அனைத்தையும் திரும்பிப் பார்த்திருப்பார்" என்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார் ரவி சாஸ்திரி.

"அவர் எதை சரியாக செய்யவில்லை? அதை யோசிப்பதைவிட, அவர் சிறப்பாக மிகவும் சரியாக விஷயங்கள் என்ன என்பதில் கவனம் செலுத்தவேண்டும். சில விஷங்கள் அவர் மனதுக்குள் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கலாம். அவை முற்றிலும் தேவையற்றதாகவும் இருக்கலாம். அவை அனைத்துமே ஒருவருக்குள் தாக்கம் ஏற்படுத்தும். ஆனால் அடுத்த என்ன செய்யவேண்டும் என்பதை யோசிக்க வேண்டிய அந்தத் தருணம் வரும். அது ஷாட் செலக்‌ஷனோ, நீங்கள் திட்டமிடும் முறையோ, எப்போது உங்கள் அணுகுமுறையை மாற்றவேண்டும் என்பதோ, இன்னும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டிய நேரம் வரும். இது, அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தும் நேரம்

"அவரின் இந்த பிரச்சனை சரியாகி விட்டது, இனி பழைய விராட் கோலியை பார்ப்பீர்கள் " - ரவி சாஸ்திரி கணிப்பு !

அவர் நிச்சயம் மிகவும் நிதானமான மனநிலையோடு திரும்பி வருவார். ஏனெனில் அவர் மீது இருந்த நெருக்கடி இப்போது சற்று குறைந்திருக்கிறது. சில காலம் இவற்றில் இருந்து அவர் ஒதுங்கி இருந்திருக்கிறார். இப்போது அவருடைய செயல்பாடு அவரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை சொல்லும். முதல் போட்டியில் அவர் அரைசதம் அடித்துவிட்டால் விமர்சனம் செய்யும் அனைத்து வாய்களும் இந்தத் தொடர் முடியும் வரை மூடிவிடும். இதற்கு முன்பு நடந்ததெல்லாம் கடந்த காலம். பொதுமக்கள் சீக்கிரம் அனைத்தையும் மறந்துவிடுவார்கள். அதனால் இது எல்லா வகையிலும் முடியலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிதானத்தை வரவழைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளாக அவர் எதிர்கொள்ளவேண்டும்" என்று கூறினார் ரவி சாஸ்திரி.

banner

Related Stories

Related Stories